டிஏபியிலிருந்து நான்கு பிரதிநிதிகள் விலகிக் கொண்டிருப்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை என்கிறார் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்.
மலாக்காவில் டிஏபியின் ஒரே எம்பியாக இருந்த சிம் தோங் ஹின்(கோத்தா மலாக்கா)வும் சட்டமன்ற உறுப்பினர்களான லிம் ஜக் வொங்(பாச்சாங்), சின் சூங் சியோங்(கெசிடாங்), கோ லியோங் சான் (டூயோங்) ஆகியோரும் திடீரென்று டிஏபியிலிருந்து விலகியது குறித்து கருத்துரைத்தபோது லிம் அவ்வாறு கூறினார்.
“எல்லாக் கட்சிகளுக்குமே பிரச்னைகள் உண்டு. பிரச்னைகள் இல்லாத கட்சி எதுவும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்”, என்றவர் சொன்னார்.
அப்படிப்பட்ட பிரச்னைகளில் ஒன்றுதான் அது என்றார். லிம் இன்று மலாக்காவில் பல தொகுதிகளுக்கு வருகை அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
நம்பிக்கை நாயகனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்– எலும்பு துண்டு போட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. உண்மை என்னவோ?
பொறுத்திரு ! குடிமுழுகப்போவுது !! சனியன் மகாதீரை சேர்த்துக்கொண்டதில் இருந்து உனக்கு பிடித்தது ஏழரை !!!
உன் குடியை காப்பாற்ற ஊர் குடியை மூழ்கடிப்பவன்தானே நீ!
அப்பன் மகன் தர்பாரினை, ஊழலை தாங்க முடியாமல் கட்சியிலிருந்து வெளியேறும் பழையவர்களை ஏளனப் படுத்த, மக்களை திசை திருப்பும் கூற்றே சிம் பாரிசானுக்கு தாவி விடுவார், பாரிசான் ஆதரவாளர், போலீஸ் உளவாளி, விலை போனவர் என்பதெல்லாம். வெளி கண்டனங்களிலிருந்து தங்களை காத்துக் கொள்ள லிம் கிட் சியாங் மற்றும் குவான் எங் போன்ற டி.ஏ.பி பெருச்சாளிகள் போட்டுக்கொள்ளும் கவசமாகவும் இது அமைகின்றது.
கடந்த 35 ஆண்டுகளில் சிம் போன்ற ஒருவர் பணத்திற்கோ பதவிக்கோ கட்சி தாவுவதென்றால் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால் ஏன் இப்பொழுது வயது முதிர்ந்த காலத்தில் என்பதே கேள்வி.
ஒரு காலத்தில் நாட்டில் குறிப்பாக மலாக்கா மாநிலத்தில் டிஏபி என்றால் ” மலாக்கா புக்கிட் சீன” என்பார்கள் அந்த அளவுக்கு மலாக்கா சீன புதை குழி மலை போராட்டத்தில் முன்நின்று போராடியவர்கள் பலர். அதில் ஒரு தளபதியாக செயல்பட்டவர் சிம். அந்த போராட்டத்தில் பங்காற்றிய பிறகு கட்சியை பலர் கைகழுவி விட்டார்கள்.
அந்த போராட்ட மலாக்கா தளபதிகளில் ஒருவராக எஞ்சி இருந்த ஒருவர்தான் இந்த சிம். அதாவது இந்தியர்களிடம் இண்ராப் போராட்டம் ஏற்படுத்திய விழிப்புணர்வை போன்று, 1982 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் படுதோல்வியை தழுவிய டி.ஏ.பியை மீண்டும் தூக்கி நிறுத்திய போராட்டம் புக்கிட்சீனா.
அவரை பணத்திற்கு விலைபோனவர், பதவிக்கு விட்டுத்தந்தவர் என்பது எல்லாம் அறியாமை. முன்பு எதிர்க்கட்சி போராட்டம் என்றால் முள் மேல் நடப்பதற்கு ஒப்பானது. அப்படிப்பட்ட போராளி கட்சியை விட்டு விலகுவது தலைமையிலுள்ள ஊழல், வஞ்சகம் நேர்மையற்ற நிலை. ஆனால் பலியை மற்றவர் மீது சுமத்தியே பழகிய இவர்களுக்கு நீதி சாகாது என்பதனை உணர்த்துவதாகவே, நில ஊழலில் பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் சிறைக்கு செல்வது இருக்கும்.