சிலாங்கூர் செயலகத்தில் சவப்பெட்டிகளுடன் ஜமால் ஆர்ப்பாட்டம்

jamalஏதாவது    வித்தைகளைக்    கையாண்டு     பொதுமக்களிடையே   விளம்பரம்    தேடிக்   கொள்வதில்   கில்லாடியான    சுங்கை   புசார்   அம்னோ   தலைவர்   ஜமால்   முகம்மட்     யூனுஸ்   இன்று    ஒரு   டஜன்   காலி    பிணப்பெட்டிகளுடன்   சிலாங்கூர்   செயலகத்துக்குமுன்    ஆர்ப்பாட்டத்தில்    இறங்கி   பதற்றத்தை  உண்டு   பண்ணினார்.

சிலாங்கூர்  மூத்த  குடிமக்களின்   ஈமச்   சடங்குகளுக்கு   உதவும்   நிதியான    “Skim Mesra Usia Emas” (எஸ்எம்யுஇ)-இல்   முறைகேடுகள்   நிகழ்ந்திருப்பதாகக்     கூறி    அதற்கு  எதிர்ப்புத்    தெரிவிக்கவே  அந்த    ஆர்ப்பாட்டம்     என்றவர்  சொன்னார்.

அப்போது   அங்கு,   பலர்   சூழ    ஜமாலின்   முன்   சென்ற  ஓர்   ஆடவர்,   அவரது    கோமாளித்தனங்களைக்  கண்டு   மக்கள்    சலிப்படைந்து   விட்டதாகக்   கூறினார்.

அதனால்   ஆத்திரமடைந்த    ஜமால்  “என்னோடு  ஒண்டிக்கு  ஒண்டி   வருகிறாயா” என்று  உடலை   முறுக்கிக்கொண்டு    நிற்க,  நல்ல   வேளையாக   எதுவும்   நடப்பதற்குமுன்   போலீசார்   தலையிட்டு  இரு   தரப்பினரையும்   தடுத்தனர்.

ஜமாலை   எதிர்த்தவர்கள்    தங்களை   சிலாங்கூர்  அரசின்   ஆதரவாளர்கள்   என்று   கூறிக்   கொண்டனர்.

முன்னதாக,   ஜமால்   தமதுரையில்   இறப்பு  உதவி   நிதிக்காக   ஒதுக்கப்பட்ட  ரிம200  மில்லியனை   மாநில  பிரதிநிதிகள்  வேறு  நோக்கங்களுக்குப்    பயன்படுத்திக்   கொண்டிருப்பதாகக்  கூறினார்.

“நான்  யாரையும்   குற்றம்    சாட்ட  வரவில்லை.  விளக்கம்   கேட்கவே    வந்தேன்”,  என்றாரவர்.