பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், டிஏபி மற்றும் பார்டி அமனாவுடன் தொடர்பு வைத்துள்ள கட்சிகளுடன் ஒத்துழைக்கப்போவதில்லை என்று அறிவித்திருப்பதால் இனி பிகேஆருடன் ஒத்துழைப்பு இருக்காது என்று பொகோக் சேனா எம்பி மாபுஸ் ஒமார் கூறினார்.
அந்த வகையில், பிகேஆர் தலைமையில் செயல்படும் சிலாங்கூர் அரசிலிருந்து வெளியேறுவது குறித்து கட்சி அடுத்து சிந்திக்க வேண்டும் என்று அந்த பாஸ் எம்பி சொன்னார்.
“பிகேஆரும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) போன்று டிஏபியுடனும் அமனாவுடனும் அரசியல் ஒத்துழைப்பை வைத்துக் கொண்டிருப்பது தெரிந்ததே.
“எனவே, பாஸ் தலைவரின் நிலைப்பாட்டின்படி பார்த்தால் பாஸ்- பிகேஆர் ஒத்துழைப்புகூட இனி கொள்கையளவில் கிடையாது”, என மாபுஸ் ஓர் அறிக்கையில் கூறினார்.
பிகேஆருடன் உறவுகள் குறித்து முடிவெடுக்க பாஸ் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத முக்தாமார்வரை காத்திருக்க வேண்டியதில்லை என்றும் அவர் சொன்னார்.
அற்பர் சகவாசம் பிராண சங்கடம் என்பதை எதிரணி இந்நேரம் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இந்த அற்ப பிராணிகளை நம்பி எதிரணி அடுத்த பொதுத் தேர்தலில் களமிறங்க முடியுமா?
1. அடுத்த பொதுத் தேர்தலில் உம்னோவுடன் கூட்டு வைக்க விரும்புவதை இந்த அற்பர்களின் அண்மைய நடவடிக்கைகள் காட்டுகின்றன.
2. அடுத்த பொதுத் தேர்தலில் வாக்கு வேட்டையாடும் அதே சமயம் இந்த அற்பர்களுக்கு ஓட்டு கிடைக்கக்கூடாது என்பதிலும் எதிரணி கனமாக இருக்க வேண்டும்.
3. வான் அம்மையாருக்கு இனிமேல் இந்த அற்பர்களின் மேல் உள்ள பாசம் குறைந்து விடவேண்டும். இல்லாவிட்டால் வரும் பொதுத் தேர்தலில் சங்கு தான்.