கிம் ஜோங்-நாமை வட கொரிய ஆள்கள் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது

kimவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின்    ஒன்றுவிட்ட சகோதரர்  கிம் ஜோங் நாமை   வட  கொரிய   ஆள்கள்தாம்  விஷம்  வைத்து   கொன்றிருக்க   வேண்டும்    என    தென்  கொரிய    உளவுத்  துறை   கூறியது.

இத்தகவல்   எப்படித்   தெரிய  வந்தது   என்பதை    அது   தெரிவிக்கவில்லை.  ஆனால்  ஜோங் உன்னின்   மாற்றாந்  தாய்  மகனான  கிம்  ஜோங்  நாமைக்  கொல்ல    வட   கொரியா   நீண்ட   காலமாகவே   ஏற்பாடுகளைச்   செய்து   வந்துள்ளதாக     அது   கூறிற்று.

கிம்   தம்   இருப்பிடமான   சீனப்   பிரதேசமான    மக்காவுக்குத்   திரும்பிச்    செல்லும்   வழியில்      கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில்   கொல்லப்பட்டார்.

கிம்மின்  குடும்பத்தார்  சீனாவின்   பாதுகாப்பில்    வாழ்ந்து    வருவதாகவும்   அந்த  உளவுத்  துறை   கூறியது.

-ராய்ட்டர்ஸ்