எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள 4 மில்லியன் மலேசியர்களை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள வலியுறுத்தும் இயக்கமொன்றை டிஏபி தொடங்கியுள்ளது.
2013 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புதிய வாக்காளர்களின் பதிவு மிகவும் குறைந்திருப்பதை அறிந்து அக்கட்சி இவ்வியக்கத்தைத் தொடங்கியுள்ளது.
2011-இல் 1.02மில்லியன் பேர் புதிய வாக்காளர்களாக பதிவு செய்து கொண்ட வேளையில் 2013க்கும் 2015க்குமிடையில் 617,000 பேர் மட்டுமே வாக்காளர்களாக பதிந்து கொண்டார்கள் என்பதைத் தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் காண்பிப்பதாக டிஏபி பிரச்சாரப் பிரிவுச் செயலாளர் டோனி புவா குறிப்பிட்டார்.
அரசியலின் இரு தரப்புமீதும் வாக்காளர்களுக்கு நல்லெண்ணம் கிடையாதுதான், ஆனால், அதற்காக அவர்கள் வாக்களிக்கும் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று புவா வலியுறுத்தினார்.
புத்ரா ஜெயாவை நோக்கி…இது முதல் படியாக இருக்கட்டும்…வாழ்த்துக்கள்.
கேவலமான அரசியல் , இது தமிழ் நாட்டிக்கு ஒரு சாப கேடு .
பங்களா,இந்தோ,ரொஹின்யாஸ் கள்ள வாக்காளர்களை யார் என்ன செய்ய முடியும்? கடந்த தேர்தலில் நடந்தது எப்போதும் நடத்தப்படும். மின்சாரம் தடைபடும் – காவல் தன கடமையை செய்யாது எப்போதும் போல். தலை எழுத்து.