ஜமாலின் சவப்பெட்டி கூத்தைத் தற்காக்கிறார் நோ ஒமார்

nohஜமால்  யூனுஸ்   பிணப்பெட்டிகளை    வைத்துக்  கொண்டு   சிலாங்கூர்   செயலகம்   முன்   அரங்கேற்றிய    ‘கூத்தை’த்    தற்காத்துப்    பேசிய   சிலாங்கூர்   அம்னோ   தொடர்புத்   தலைவர்     நோ   ஒமார்,   அவர்    அதன்  மூலமாக    ஒரு   செய்தியைச்  சொல்ல   முனைந்தார்    என்றார்.

“அவர்  (ஜமால்)  அந்தத்   திட்டங்களின்   அமலாக்கம்    ஏமாற்றமளிப்பது  ஏன்  என்று   (மந்திரி   புசார்)  விளக்க   வேண்டும்    என்று   கேட்டுக்கொண்டார்,  அவ்வளவுதான்”,  என்று   நோ  ஒமார்   கூறினார்.

“அதற்காகத்தான்   சவப்  பெட்டிகளையும்   பிண  வண்டியையும்   கொண்டு   வந்திருந்தார்”,  என  நோ   நேற்றிரவு    செய்தியாளர்   கூட்டமொன்றில்   தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை   15  பிணப்பெட்டிகள்,  ஒரு   பிண  வண்டி   ஆகியவற்றுடன்    சிலாங்கூர்  செயலகம்     சென்ற   சுங்கை   புசார்   அம்னோ   தலைவரான   ஜமால்,    சிலாங்கூரில்    மூத்த    குடிமக்களின்   ஈமச்   சடங்குகளுக்காக   ஒதுக்கப்பட்ட    நிதி    தவறாக   பயன்படுத்தப்படுவதாக   ஆர்ப்பாட்டம்   செய்தார்.

மூத்த  குடிமக்களுக்கு   இறப்பு  உதவிக்காக   ஒதுக்கப்பட்ட   ரிம200  மில்லியனைச்  சட்டமன்ற   உறுப்பினர்களும்     மாநில   அரசால்   நியமிக்கப்பட்ட  ஒருங்கிணைப்பாளர்களும்  வேறு  நோக்கங்களுக்குப்  பயன்படுத்திக்   கொண்டிருப்பதாக   ஜமால்   கூறினார்.