பாஸ், எதிர்வரும் ஆண்டுக் கூட்டத்தில் அது குறித்து விவாதிப்பதற்குத் திட்டமிட்டிருந்தாலும் சிலாங்கூரில் பிகேஆருடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாது என்றே அதன் உதவித் தலைவர் இஸ்கண்டர் அப்துல் சமட் நினைக்கிறார்.
“முக்தாமார்( பொதுப் பேரவை) பிகேஆருடன் உறவுகளை வெட்டிக்கொள்ள முடிவெடுக்காது என்றே நம்புகிறேன்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“பாஸ், கிழக்குக்கரை மாநிலக் கட்சி அல்லது மலாய்க்கார் கட்சி அல்ல அது ஒரு தேசிய கட்சி என்பதைக் காண்பிக்க சிலாங்கூர் பாஸுக்கு மிகவும் முக்கியம்.
“அம்மாநிலத்தில் எல்லாத் தரப்புகளுக்கிடையிலும் நல்ல ஒத்துழைப்பு நிலவுகிறது. உறவுகள் வழக்கம்போல் உள்ளன. இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை ஏனென்றால், சிலாங்கூர் மற்ற மாநிலங்களிலிருந்து மாறுபட்டது”, என்று இஸ்கண்டர் கூறினார்.
ஆயிரத்தில் ஒருவன்
ஆமாம் சிலாங்கூரில் இன வாதம், மதவாதம், எடுபடாது என்பது மட்டுமல்ல ! ஆச்சியில் பங்காளியாக ஒட்டி கொண்டிருப்பதனால்
கிடைத்து வரும் வசதிகளையும் இழந்து விட பாஸ் தயாராக இல்லை
என்பதே உண்மை !!!
பாஸ் கட்சி குடைச்சல் கொடுக்கும் , அவர்களின் நட்பே வேண்டாம் சாமி !