டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் பேங்க் நெகாரா மலேசியாவில் ஏற்பட்ட அன்னிய செலாவணி இழப்பைப் புலனாய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பணிக்குழுவுக்கு உதவ முன்வர வேண்டும் என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட் .
“பார்க்கப்போனால், அவர்தான் பணிக்குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முதல் ஆளாக இருக்க வேண்டும்.
“ஏனென்றால், 1990-களில் அது குறித்து நிறைய பேசியவர், பல தீர்மானங்களைக் கொண்டு வந்தவர் அவர்”.
1993-லிலும் 1994-இலும் அவர் கொண்டு வந்த தீர்மானங்களில் உண்மைகள் இருக்குமானால் அதை நிரூபிக்க இப்போது அவருக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது என்று குறிபிட்ட அஸலினா, அவர் பணிக்குழுவிடம் சம்பந்தப்பட்ட உண்மைகளைத் தெரிவிக்க வேண்டும் என்றார்.
பேங்க் நெகாராவுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு, அதை மூடிமறைக்க முயற்சிகள் நடந்ததா என்பதை ஆராய சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக பிரதமர்துறை புதன்கிழமை அறிவித்தது
1mdb என்ன கதை என்று விவரமா சொல்லு தாயி !