கடந்த ஞாயிற்றுக்கிழமை டிஏபி-இலிருந்து வெளியேறிய நான்கு பிரதிநிதிகளும் அவர்களின் முன்னாள் கட்சி குறித்துப் பேச பாரிசான் நேசனல் விடுத்த அழைப்பைப் புறந்தள்ளினர்.
கோத்தா மலாக்கா எம்பி சிம் தோங் ஹிம், தம்மையும் கட்சியிலிருந்து விலகிய ஏனைய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் பிஎன் கருத்தரங்கமொன்றில் பேசுவதற்கு மலாக்கா முதல்வர் இட்ரிஸ் ஹருன் அழைத்தார் என்றார்.
“டிஏபி-இன் குறைகளை எடுத்துரைக்க முதலமைச்சர் அழைத்தார். நாங்கள் ‘முடியாது’ என்று கூறி விட்டோம்.
“நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. நாங்கள் பிஎன்னை அதுவும் அம்னோவை என்றும் ஆதரித்ததில்லை. அதை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இட்ரிஸ் நிலைமையைச் சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார் என்று அவர் சொன்னார்.
இட்ரிஸ், இப்போது சுயேச்சை பிரதிநிதிகளான அந்நால்வரையும் பிஎன்னில் சேர அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கும் BN நாதாரிகள் -இதை எதிர்பார்த்ததே.
புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது அவருக்கு தெரியவில்லை போலும் . தெரிந்த மகா கண்ணன் போன்ற அதி மேதாவிகள் அவருக்கு புரிய வையுங்கள் .
தொகைய கூட்டுங்கடா..அதுக்கு படியாத பன்னி உண்டா?
வாடககாற்று மூக்கை துளைப்பதும் நுகர்ந்து
நோட்டமிடுவதும் அரசியலில் சில நேரங்களில்
லீ லாம் தாய் போல BN ல் பெரிய இடத்துக்கு போனவர்கள்
உண்டுதான்…… காரில் பெட்டிஷன் அடித்த்தவர்தான். இப்போது பல் மாடிகளுக்கு டிக்கட் கொடுப்பவரானார். நாட்டின் நேச மணி கொடுத்து வச்ச ஜாதி மணி.
அப்பன் மகன் தர்பாரினை, ஊழலை தாங்க முடியாமல் கட்சியிலிருந்து வெளியேறும் பழையவர்களை ஏளனப் படுத்த, மக்களை திசை திருப்பும் கூற்றே சிம் பாரிசானுக்கு தாவி விடுவார், பாரிசான் ஆதரவாளர், போலீஸ் உளவாளி, விலை போனவர் என்பதெல்லாம். வெளி கண்டனங்களிலிருந்து தங்களை காத்துக் கொள்ள லிம் கிட் சியாங் மற்றும் குவான் எங் போன்ற டி.ஏ.பி பெருச்சாளிகள் போட்டுக்கொள்ளும் கவசமாகவும் இது அமைகின்றது.
கடந்த 35 ஆண்டுகளில் சிம் போன்ற ஒருவர் பணத்திற்கோ பதவிக்கோ கட்சி தாவுவதென்றால் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால் ஏன் இப்பொழுது வயது முதிர்ந்த காலத்தில் என்பதே கேள்வி.
ஒரு காலத்தில் நாட்டில் குறிப்பாக மலாக்கா மாநிலத்தில் டிஏபி என்றால் ” மலாக்கா புக்கிட் சீன” என்பார்கள் அந்த அளவுக்கு மலாக்கா சீன புதை குழி மலை போராட்டத்தில் முன்நின்று போராடியவர்கள் பலர். அதில் ஒரு தளபதியாக செயல்பட்டவர் சிம். அந்த போராட்டத்தில் பங்காற்றிய பிறகு கட்சியை பலர் கைகழுவி விட்டார்கள்.
அந்த போராட்ட மலாக்கா தளபதிகளில் ஒருவராக எஞ்சி இருந்த ஒருவர்தான் இந்த சிம். அதாவது இந்தியர்களிடம் இண்ராப் போராட்டம் ஏற்படுத்திய விழிப்புணர்வை போன்று, 1982 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் படுதோல்வியை தழுவிய டி.ஏ.பியை மீண்டும் தூக்கி நிறுத்திய போராட்டம் புக்கிட்சீனா.
அவரை பணத்திற்கு விலைபோனவர், பதவிக்கு விட்டுத்தந்தவர் என்பது எல்லாம் அறியாமை. முன்பு எதிர்க்கட்சி போராட்டம் என்றால் முள் மேல் நடப்பதற்கு ஒப்பானது. அப்படிப்பட்ட போராளி கட்சியை விட்டு விலகுவது தலைமையிலுள்ள ஊழல், வஞ்சகம் நேர்மையற்ற நிலை. ஆனால் பலியை மற்றவர் மீது சுமத்தியே பழகிய இவர்களுக்கு நீதி சாகாது என்பதனை உணர்த்துவதாகவே, நில ஊழலில் பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் சிறைக்கு செல்வது இருக்கும்.