பாலமுருகனை அடித்த போலீஸ்காரர்களைக் கைது செய்யுங்கள், வழக்குரைஞர்கள்

 

JusticeforBala1போலீஸ் லாக்கப்பில் இருக்கும் போது மரணமடைந்த எஸ். பாலமுருகனின் உடல்மீது நடத்தப்பட்ட இரண்டாவது பிரேதச் சோதனை அவர் கடுமையாக அடிக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.

அச்சோதனையில் கிடைத்த தகவல் அடிப்படையில் அதில் சம்பந்தப்பட்டவர்களை “உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று வழக்குரைஞர்கள் என். சுரேந்திரன் மற்றும் லதீபா கோயா வலியுறுத்தினர்.

இரண்டாவது பிரேதச் சோதனை பாலமுருகன் குடும்பத்தினரின் அச்சத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அவரது உடம்பின் பல பாகங்களில் – நெஞ்சு, தலை, கால்கள் மற்றும் பின்புறம் – காயங்கள் இருக்கின்றன.

கோலாலம்பூர் மருத்துவமனை மருத்துவர்களின் அறிக்கைப்படி பாலமுருகனுக்கு இருதயப் பிரச்சனை இருந்தது. போலீஸ் லாக்கப்பில் JusticeforBala2அவருக்கு கொடுக்கப்பட்ட முரட்டுத்தனமான அடிகள் மாரடப்பைத் தூண்டியுள்ளது.

நேற்று மாலை, கோலாலம்பூர் மருத்துவமனையின் பரிசோதனை அறிக்கை போலீசார் உடனிருக்க பாலமுருகனின் குடும்பத்தாரிடமும் வழக்குரைஞர்களிடமும் வழங்கப்பட்டது.

இந்த மரணத்திற்கான காரணம் குறித்து வேறு எந்த சந்தேகமும் இல்லாலதால் இன்னொரு விசாரணை தேவையில்லை என்று கூறிய வழக்குரைஞர்கள், இந்தக் கொடுங்குற்றத்துற்குப் பொறுப்பானவர்களை தாமதமின்றி நீதியின்முன் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இது குறித்து கருத்துரைக்க மலேசியாகினி அதிகாரிகளுடன் தொடர்புகொண்டுள்ளது.