1990-களில் பேங்க் நெகாராவின் வெளிநாணயச் செலாவணி பரிவர்த்தனையில் ஏற்பட்ட இழப்புகளைப் புலனாய்வு செய்யும் சிறப்புப் பணிக் குழு குறித்து விளக்கமளிக்க அம்னோ- பிஎன் ஏற்பாடு செய்துள்ள விளக்கக் கூட்டத் தொடரில் பேசுவதற்கு லிம் கிட் சியாங் முன்வந்துள்ளார்.
“(அம்னோ தகவல் தலைவர்) அனுவார் மூசா அடுத்த 48-மணி நேரத்துக்குள் எனக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் சனிக்கிழமை அந்த விளக்கக் கூட்டத் தொடரின் தொடக்க விழாவில் பேசுவதற்குத் தோதாக என் நிகழ்ச்சித் திட்டத்தைத் திருத்தி அமைத்துக் கொள்ள முடியும்”, என அந்த டிஏபி மூத்த தலைவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
பணிக்குழு அமைக்கப்பட்டதற்குக் குறைகூறல்கள் எழுந்திருப்பதை அடுத்து பணிக்குழு ஏன் அவசியமென்பதை விளக்க விளக்கக் கூட்டங்கள் நடந்த வேண்டியது அவசியமாகிறது என அனுவார் நேற்று கூறினார்.
முதலாவது விளக்கக் கூட்டம் வரும் சனிக்கிழமை ஹுலு சிலாங்கூரில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
லிம் ஏற்கனவே பேங்க் நெகாரா ஃபோரெக்ஸ் இழப்பு குறித்து விசாரணை செய்யும் குழுவில் பங்கேற்க தயார் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“பேங்க் நெகரா ஃபோரெக்ஸ் இழப்பு குறித்து விசாரணை செய்யும் குழுவில் பங்கேற்க நான் தயார். ஆனால், அவ்விசாரணை பேங்க் பூமிபுத்ரா நிதி நிறுவனம், 1எம்டிபி ஊழல் ஆகியவற்றையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட வேண்டும்”, என்று அவர் கூறினார்.
அப்படிபோடுதல.பேங்பூமிபுத்ராநிதிநிறுவனம்
எம்,டிபி ஊழல்.மற்றும்பல முறைகேடுகளை
யும் விசாரிக்க அழுத்தம் குடுத்து கைலியை
உருவிடுங்க!
உங்களை பேச விடுவான்களா? உண்மைக்கும் அம்னோவுக்கும் தான் வெகு தூர மாயிற்றே.
திருடனா பார்த்து திருந்தா விடடாள் திருடடை ஒழிக்க முடியாது .