புத்ரா ஜெயா அரசாங்கத் துறைகளையும் நிறுவனங்களையும் திருத்தி அமைப்பதன் மூலமும் ஒரே மாதிரியான பணிகளைச் செய்யும் அரசுத்துறைகளை ஒழித்துக் கட்டுவதன் மூலமும் அரசுப் பணியாளர் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என பக்காத்தான் ஹராபான் கருதுகிறது.
அரசாங்கப் பணியாளர் எண்ணிக்கையைச் சீராக்கும் பணியை பிரதமர் துறையிலிருந்து தொடங்கலாம் என்று ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ள டிஏபி, பிகேஆர், பார்டி அமனா நெகரா(அமனா) ஆகிய மூன்றும், அதில் ஒன்பது அமைச்சர்களும் மூன்று துணை அமைச்சர்களும் இருப்பதாகக் குறிப்பிட்டது.
“அதில் உள்ளவர்கள் தகுதி, திறமையின் காரணமாக அல்லாமல் பிஎன் பங்காளிக்கட்சிகளுக்கு இடமளிக்க வேண்டும் என்பதற்காகவே சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள்”, என்று அது கூறிற்று.
அமைச்சர்களின் தகுதிகொண்ட சிறப்புத் தூதர்களையும் அமைச்சின் ஆலோசகர்களையும் ஒழிக்க வேண்டும் என்று பக்கத்தான் பரிந்துரைத்தது.
“நாட்டின் மேம்பாட்டுக்கு எந்த வகையிலும் உதவாத பதவிகள் அவை. அரசதந்திரிகள் செய்யும் பணியைத்தான் அவர்களும் செய்கிறார்கள்”, என்று அவை கூறின.
கூட்டரசுப் பிரதேச அமைச்சையும் எடுக்க வேண்டும். அது கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம், புத்ரா ஜெயா கார்ப்பரேஷன் போன்றவை செய்யும் பணிகளைத்தான் செய்கின்றது.
அந்த அமைச்சின் ரிம1.6பில்லியன் பட்ஜெட்டை வீடமைப்பு, ஊராட்சி அமைச்சிடம் கொடுக்கலாம். கட்டுப்படியான விலையில் வீடுகள் கட்டிக் கொடுக்க அது பயன்படும் என ஹராபான் கூறியது.
அதெல்லாம் ஒன்றும் நடக்காது.தேர்தலில் இவர்கள் தான் வைப்பு நிதி. இவ்வளவு தில்லு முள்ளு செய்யும் இந்த அல்தான் தூயா நம்பிக்கை நாயகன் நாஜீபை பெரிய ஒழுக்க சீலன் என்று எதிர் பார்க்க முடியுமா? இவன் பட்டம் பதவியை குரங்கு பிடிபிடித்து விடுவான் என்று என்ன முடியுமா?
1. இது குறித்து அண்மையில் கருத்துரைத்த அறி(விலி)வாளி ஒருவர் குறைந்த சம்பளம் வாங்குவோரை முதலில் களையெடுக்க வேண்டும் என்றார்.
2. குறைந்த சம்பளம் வாங்குவோர் 20-பேரை களை எடுப்பதும் அதிக சம்பளம் வாங்கும் ஒருவரை கலையெடுப்பதும் இரண்டும் ஒன்று தான். ஆனால் முன்னதைச் செய்தால் 20-குடும்பங்கள் பாதிக்கப்படும்,. பின்னதைச் செய்தால் யாரும் பாதிக்கப்படமாட்டார் காரணம் அதிக சம்பளம் வாங்குபவர் இந்நேரம் போதுமான அளவுக்கு வாங்கி ‘சேர்த்து’ வைத்திருப்பார்.
3. அதிக சம்பளம் வாங்குவோரோ அல்லது கூடுதல் சம்பளம் வாங்குவோரோ யாராக இருப்பினும் வேலை செய்யாமல் சோம்பித் திரிபவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
4. வேலையே இல்லாமல் அல்லது மற்ற துறையுடன் இனைக்கச் சாத்தியம் உள்ள துறைகளை ஒன்றிணைத்து மீதப்படுவோரை பணி நீக்கம் செய்யலாம்.
5. அண்மையில், ‘பிரிம்’ உதவித்தொகை கொடுக்கும் அளவுக்கு நாட்டின் நிதிவளம் சீராக இருக்கிறது என்று பெரியண்னன் சொன்னார். அது உண்மையாக இருந்தால் அர்சுப் பணியாளர்களை குறைக்கச் சொல்லி இப்போது பேசப்படுவது ஏன்? அவர்களுக்கு பெரியண்ணனின் பதில் என்ன?
6. ஈராண்டுகளுக்கு முன் எதிரணித் தலைவர் ஒருவர் எதிரணி புத்ராஜெயாவை வென்று மத்தியில் அரசாங்கம் அமைத்தால் முதலில் அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றார். அந்தச் சமயத்தில் எதிர்ப்புக்குரல் பலமாக எழுந்தது. ஆனால் இப்போது ஆளும் கட்சியைச் செர்ந்த ஒருவர் அதே கருத்தை அதாவது அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்று சொன்ன போது முன்வைக்கும் போது ஏன் எதுவுமே ‘குரைக்க’வில்லை..?