பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளிடம் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் ரோஸ்மா மன்சூர். ஜோகூரில் அதிகாலை வேளை பதின்ம வயது சைக்கிளோட்டிகள் எண்மர் பலியான சம்பவதை அடுத்து அவர் பெற்றோருக்கு இந்த அறிவுரையை வழங்கினார்.
பிள்ளைகள் எங்கே போகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதையும் பெற்றோர் அறிந்து வைத்திருக்க வேண்டும் எனப் பிரதமரின் துணைவியார் சொன்னார்.
“அச்சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. பெற்றோர் பிள்ளைகளிடம் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.
“அவர்கள்(பிள்ளைகள்) வெளியே சென்றால், அவர்கள் யாருடன் சேர்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எப்போது திரும்பி வருவார்கள் என்பதையெல்லாம் கேட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
“பெற்றோர் கண்டிப்பு காட்ட வேண்டும்”. இன்று புத்ரா ஜெயாவில் பாலியல் குற்றங்கள்மீதான கருத்தரங்கைத் தொடக்கி வைத்த பின்னர் ரோஸ்மா செய்தியாளர்களிடம் பேசினார்.
ரொசம்மா நீங்கள் கணவர் மேல் கண்வைத்தி
ருந்தால் அல்தான்தூயா பிரச்சனை வந்திரு
காதே?
யாருக்குமே தெரியாத அருமையான கருத்து??
அறிவுரை சொல்ல தகுதி வேண்டும் .
சிறார் பொழுது , போக்குக்கு என்ன செய்ய வேண்டும் -. மாவட்டங்கள் தோறும் செய்யுங்கள் -. சிந்தனையில் உதிக்காதே? .- இறப்பிற்கு பின்தான் ஞானோதியம் பிறக்கும் .-
சிறு வயதில் உங்களைக் கவனிக்க ஆளில்லை! இருந்திருந்தால் இந்த நாடே நல்ல இருந்திருக்கும்!