தேர்தல் சீரமைப்புக்காகப் போராடிவரும் பெர்சே தகுதிபெற்ற மேலும் பலர் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்வதை ஊக்குவிக்க வாக்காளர் பதிவு இயக்கத்தை மேற்கொள்ளவுள்ளது. அவ்வியக்கம் மார்ச் மாதம் முழுவதும் தொடரும்.
“இப்போதைக்கு வாக்காளர்களாக பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறைவுதான். மொத்தம் 4.4 மில்லியன் குடிமக்கள் இன்னும் தங்களை வாக்காளர்களாக பதிந்து கொள்ளவில்லை.
“ஒவ்வொரு காலாண்டிலும் சுமார் 180,000 தகுதிபெற்ற மக்கள் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்வதில்லை”, என பெர்சே தலைவர் மரியா சின் இன்று பெட்டாலிங் ஜெயாவில் கூறினார்.
‘U Campaign’ என்றழைக்கப்படும் இவ்வியக்கம் மார்ச் 4-இல், பகாங்கின் குவாந்தானிலும் சாபாவின் கோத்தா கினாபாலுவிலும் தொடங்கி மார்ச் 25-ல் பெட்டாலிங் ஜெயாவில் முடிவுறும் என்றாரவர்,
1. வாக்காளர்களாக பதிவுச் செய்துக் கொள்வதில் நமக்கு எந்தச் சிரமங்களுமிருக்காது. அடிப்படைத் தகுதி நாம் மலேசியர்களாக இருக்க வேண்டும். 21 வயதை அடைந்துவிட்டவர்கள், இதுநாள் வரை பதிவுச் செய்யாமலிருந்தவர்கள், அருகிலுள்ள தபால் நிலையம் சென்று பதிவுச் செய்துக் கொள்ளலாம். அவசியம் பதிவுச் செய்துக் கொள்ளவேண்டுமென்பதே நம் அடிப்படை நோக்கமாகயிருக்க வேண்டும். நம் மரியாதையும் மதிப்பும் நாம் இதுநாள்வரை பெற்றக் கல்வியிலோ அல்லது பொருளாதார வளர்ச்சியிலோயில்லை. இனிமேலும் அப்படித்தானிருக்கும். மாநில அளவிலும், தேசிய அளவிலும் அரசியலில் நம் வலிமையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்க்கு ஒரே வழி நம் வாக்கு வலிமையை வளர்த்துக் கொள்வதுதான். தேசிய அளவில் நாம் வலிமையான வாக்கு வங்கியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைக்கும் நம்மிடமுள்ள பெரிய பலவீனம் நாம் மற்றவர்களை இன்னும் நம்பி வாழ்வதுதான். இதுநாள் வரை ஆட்சியில் நம்மை பிரதிநிதித்து வந்த அரசியல் கட்சியின் மேலிருந்த நம்பிக்கையும் பொய் விட்டது. ஆகவே, நாம் தேசிய அளவில் வலிமையான வாக்கு வங்கியை ஏற்படுத்திக் கொண்டு, ஒற்றுமையோடும், புரிந்துணர்வோடும், இனவுணர்வோடும் செயல்பட வேண்டும். நல்ல மாற்றங்களை நாம் பெறலாம்; பெறவும் வேண்டும். ஒன்றுப் பட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமையில்லையேல் நிச்சயம் தாழ்வுதான். ஆகவே தயவுச் செய்து வாக்காளர்களாக பதிவுச் செய்துக் கொள்ளுங்கள். அதையும் உடனே செய்யுங்கள்; இந்தச் செய்தி அனைவருக்கும்போய்ச் சேரவேண்டும்; சேரட்டும்.