புறநகர், புறநகர் மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் முகம்மட் அரிப் அப் ரஹ்மான் மீதும் அவரின் அஹமட் சுஹாய்ரி முகம்மட் அரிப்மீதும் இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அண்மையில்தான் பணி ஓய்வு பெற்ற அரிப், தம் மகன் சூரிய ஆற்றல் மின் நிறுவனம் ஒன்றிடமிருந்து எஸ்$200, 000 கையூட்டு பெற உடந்தையாக இருந்தார் என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தார்.
அந்நிறுவனம் சண்டாகான் அருகில் உள்ள நான்கு தீவுகளில் ரிம57.5 மில்லியன் மதிப்புள்ள சூரிய ஆற்றல் மின் கருவிகளை விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அந்தக் கையூட்டைக் கொடுத்திருக்கிறது.
கையூட்டுப் பணத்தை அரிப்பின் மகன் அஹமட் சுஹாய்ரி அரிப் சார்பில் கோலாலும்பூர் லேக் கிளப்பில் பெற்றுக்கொண்டாராம்.