ஜோங்-நாம் கொலையைக் காண்பிக்கும் சிசிடிவி கேமிரா பதிவுகளை அனைத்துலக ஊடகங்கள் பெற்றது எப்படி என்பதை பார்டி அமனா துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப் தெரிந்து கொள்ள விரும்புகிறார்.
“ஜோங்-நாம் கொலையைக் காண்பிக்கும் சிசிடிவி பதிவுகள் வெளிநாட்டு ஊடகங்களுக்குக் கிடைத்து அவை ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் காண்பிக்கப்பட்டது எப்படி என்பதுதான் கேள்வி?”, என சலாஹுடின் இன்று கோலாலும்பூரில் கட்சித் தலைமையகத்தில் வினவினார்.
அதன் விளைவாக நாட்டின் பாதுகாப்புமீது அனைத்துலக சமூகம் கொண்டுள்ள நம்பிக்கை குறைந்து போகுமே என்றவர் கவலை தெரிவித்தார்.
பணம் இருந்தால் நாட்டில் எதையும் பெறலாம்போல் தெரிகிறது என்று அந்த அமனா தலைவர் குமுறினார்.
கடைசியாகச் சொன்னீர்களே பணம் இருந்தால் எதனையும் பெறலாம் – அது தான் உண்மை!
இந்த நாட்டில் என்ன நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எல்லாம் முடியும் என்பது மலேசியாவின் தத்துவம்.அதன் விளைவு இன்றய நாட்டில் நடக்கும் நிகழ்வுகள்.