மலேசிய இந்தியர்களைச் சித்திரிப்பதற்கு வெளிநாட்டவரின் படத்தைப் பயன்படுத்தி கட்-அவுட் தயாரித்ததற்கு மியூசியம் நெகரா (தேசிய அருங்காட்சியகம்) மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
மலேசியாவின் வெவ்வேறு காலக்கட்டங்களைக் காண்பிக்கும் பகுதியில் “இன்றைய மலேசியா”வின் இந்தியர்களைச் சித்திரிக்கும் ஒரு ஆடவரின் படமும் இருந்தது. ஆனால் அதற்கு வெளிநாட்டு ஆடவர் ஒருவரின் படம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குர்தா அணிந்த அவரின் படத்தை இணையத்திலிருந்து உருவி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
மற்ற இனத்தார் எல்லாம் அவரவர் பாரம்பரிய ஆடைகளில் காணப்படுகிறார்கள். அவர்களிடையே குர்தா அணிந்த இந்த ஆடவரின் படமும் காணப்படுகிறது.
இதன் தொடர்பில் மலேசியாகினி இன்று அருங்காட்சியகத்தின் மூத்த பொறுப்பாளர் நொராய்னி பஸ்ரியைச் சந்தித்தது.
“ இதை நாங்கள் கவனிக்கவில்லை.
“இதன் தொடர்பில் புகார்கள் வந்துள்ளன. அதற்குப் பதிலாக உள்ளூர்காரர் ஒருவரின் படத்தை வைப்போம்.
“அதற்குச் சில வாரங்கள் ஆகலாம். தவற்றுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்”, என்றார்.
கடந்த வாரம், மகேன் பாலா என்பவர் முகநூலில் அது குறித்து சாடியிருந்தார்.
“தேசிய அருங்காட்சியகத்துக்கு உருப்படியான மலேசிய இந்தியர் ஒருவரின் படம் கிடைக்கவில்லை. இணையத்தளத்தில் உள்ளதை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பிரமாதம்”, என்று கூறினார்.


























அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும். கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவர் செய்தால் இப்படித்தான் நடக்கும். அதென்ன சில வாரங்கள்? அப்படியே அனைத்தையும் அப்புறப் படுத்துங்கள்!
சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே செய்யப்படும் இம்மாதிரியான சில்விஷமங்களுக்கு மன்னிப்பு எதற்கு? மன்னித்து விட்டுவிட்டால் மீண்டும் மீண்டும் இம்மாதிரை செய்யலாம் என்பதற்காகவா?
உடனடியாக கோபித் சிங் படத்தை வைக்கவும்
இதே பொழப்பா போச்சி எல்லாம் முடிந்த பிறகு மன்னிப்பு,மன்னிப்பு கேட்டடா தமிழன் மன்னித்து விடுவான் என்று இவர்களின் தாரக மந்திரம்.இன்னும் எத்தனை காலம் தான் ஏமாத்துவார்கள்…மன்னிப்பு
1980 மியூசியம் நெகரா (தேசிய அருங்காட்சியகம்) தில், மலேசியாவின் முதல் விளையாட்டு வீரர் ,வீராங்கனை,வீரர் மருத்துவர் ஜெகதீசன் ,வீராங்கனை ராஜாமணி படங்கள் இருந்தன .இன்றும் இருக்கிறதா ? தெரியவில்லை … இருந்தால் வாழ்த்துகள் . இல்லையேல் சரித்திரம் மறைக்கப்பட்டுள்ளது .