இபிஎப் 1எம்டிபியில் செய்துள்ள 1.72 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை திரும்பப் பெற வேண்டும்

 

EPFதொழிலாளர் சேமநிதி (இபிஎப்) 1எம்டிபியில் செய்திருக்கும் ரிம1.72 பில்லியன் முதலீட்டை உடனடியாகத் தள்ளிவிட்டு வெளியேற வேண்டும் என்று பாக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் இபிஎப்பை வலியுறுத்தியுள்ளனர்.

2016 ஆம் ஆண்டுக்கான இபிஎப்பின் இலாபப் பங்கு விகிதம் குறைந்ததற்கான காரணம் 1எம்டிபியில் இபிஎப் செய்துள்ள ரிம1.72 பில்லியன் முதலீடாகும் என்று அமனா நெகாராவின் சுல்கிப்லி அஹமட், பிகேஆரின் வோங் சென் மற்றும் டிஎபியின் தெரசா கோக் ஆகியோர் இன்று கூட்டாக விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளனர்.

இபிஎப்பை போலவே தாபுங் ஹஜி போன்ற அமைப்புகளும் அரசு முதலீட்டு நிதியில் செய்துள்ள முதலீடுகளை எடுத்துக்கொண்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இபிஎப் நிதிப் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. அது இபிஎப் உறுப்பினர்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் என்று கூறிய அவர்கள், இபிஎப் செய்துள்ள ரிம1.72 பில்லியன் முதலீடு ஒரு பெரும் தொகையாகும், அது மக்களின் சேமிப்பிலிருந்து வந்ததாகும் என்றனர்.