வட கொரியத் தலைவர் கிம் ஜொங்- உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜொங்-நாமின் கொலையை அடுத்து வட கொரியா விமான நிறுவனமான ஏர் கொர்யோ-வின் உள்ளூர் அலுவலகம் எங்கே உள்ளது என்பது மர்மமாக உள்ளது.
கிம் ஜொங்-நாமின் கொலை தொடர்பில் ஏர் கொர்யோ பணியாளர் ஒருவரை போலீஸ் தேடுவதை போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பக்கார் உறுதிப்படுத்தியதை அடுத்து அந்த விமான நிறுவனத்தின் அலுவலகத்தின்மீது கவனம் திரும்பியது.
ஏர் கொர்யோவின் இணையத்தள பிரதிநிதியாக செயல்பட்டுவரும் ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு நிறுவனத்தின் பணியாளர் ஒருவர், அவ்விமான நிறுவனம் குறித்த எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க மறுத்து விட்டதாக த ஸ்டார் கூறியது.
நேற்று அவரிடம் ஏர் கொர்யோ பற்றி வினவியதற்கு “அது இங்கில்லை” என்று கூறிக் கதவை இழுத்து மூடிக் கொண்டாராம்.
Worldwide Highsky Sdn Bhd என்ற அந்நிறுவனம் அதன் அலுவலகத்தில் இருந்த ஏர் கொர்யோவின் விளம்பரப் பலகையையும் அகற்றியிருக்கிறது. அதே வேளை, அதன் சுவரில் காட்சியளிக்கும் அந்த நிறுவனம் பிரதிநிதிக்கும் 24 விமான நிறுவனங்களின் பெயர்ப் பட்டியலில் ஏர் கொரியாவின் பெயர் உள்ளது.
விளம்பரப் பலகையை அகற்றச் சொன்னது விமான நிறுவனமா அல்லது இந்த இணைய நிறுவனமே ஊடகங்களின் விசாரணைகளைத் தவிர்க்க அவ்வாறு செய்யாதது என்பது தெரியவில்லை.
ஐயகோ அலுவலகம் காணாம போச்சே….ஆத்தா சுட்ட வடை காணாம போன மாதிரி அசால்டா சொல்றாய்ங்களே…யாராவது எடுத்திருந்தா கொடுத்திடுங்கப்பா…இல்லே அழுதுடுவானுங்க…