பேங்க் நெகரா முன்னாள் கவர்னர் ஸெட்டி அக்தார் அசிஸ், 1990-களில் பேங்க் நெகாராவுக்கு அன்னிய நாணயச் செலாவணி பரிவர்த்தனையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் ரிம10 பில்லியன் இழப்புமீதான விசாரணையில் ஒத்துழைக்க தயார் என்று அறிவித்துள்ளார்.
இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸெட்டி, தாம் மத்திய வங்கியின் ஆளுனராக இருந்த 16-ஆண்டுக் காலத்தில் இவ்விவகாரம் எழுப்பப்பட்டதில்லை என்றார்.
“அப்படி எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக கடுமையான நிர்வாகக் கட்டமைப்புகள் மத்திய பொருளகத்தில் உண்டு”, என்றாரவர்.