மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி), ஊழல் குற்றத்துக்காக பேராக் குடிநுழைவுத் துறை இயக்குனரையும் மேலும் மூவரையும் இன்று கைது செய்தது.
நள்ளிரவுக்கும் காலை மணி 5.30க்குமிடையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி ஓர் அறிக்கையில் கூறியது.
குடிநுழைவு இயக்குனர் தவிர்த்து கைதான மற்ற மூவரில் இருவர் வணிகர்கள், ஒருவர் மெக்கானிக்.
அவர்கள் கேளிக்கை மையங்கள், உடம்புப் பிடி நிலையங்கள் ஆகியவற்றிடமிருந்து கையூட்டு பெறும் விவகாரத்தில் தொடர்புள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.
நால்வரும் இன்று தொடங்கி ஐந்து நாளைக்கு விசாரணைக்கு உதவியாக தடுத்து வைக்கப்பட்டனர்.
“பூமி புத்திரா முதலாளித்துவம்” என்ற முன்னால் பிரதமரின் தாரக மந்திரத்தின் விளைவுதான் இது. அரசாங்கப் பணி மலாய்க்காரர்களூக்கே என்ற கொள்கை தொடரும் வரை ஊழல் கையூட்டு போன்ற “நற்செயல்களும்” தொடர்ந்த வண்ணமாகவே இருக்கும் என்பது உறுதி. மலேசிய ஊடகங்கள் இந்நிலையை உறுதி செய்துள்ளன. எம்,ஏ.சி.சி. மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
தமிழ் பித்தன் ! சரியாக சொன்னிர்கள் .எல்லா அசிங்கங்களுக்கும் காரணம் அந்த நாதாரி ,முள்ளமாரி , முடிசறுக்கி காக்கா மஹாதிர்தான் !!
ஊழலுக்காக கைது செய்ய வேண்டுமானால் அரசு சம்பந்தப்பட்ட வர்கள் குறைந்தது 50 % உள்ளே இருக்க வேண்டும்.