கேஎல்ஐஏ-இல் கதிரியக்கப் பொருளா? கவனமாக ஆராயப்படும்

igpகிம்  ஜோங்-நாம்   கொலையில்  நரம்பு  மண்டலத்தை  பாதிக்கும்  விஎக்ஸ்   என்னும்  விஷத்தன்மை  மிக்க   வேதிப்பொருள்  பயன்படுத்தப்பட்டிருப்பது   தெரிய  வந்துள்ளதை   அடுத்து    கோலாலும்பூர்   அனைத்துலக   விமான  நிலையத்திலும்   மற்ற  இடங்களிலும்    கதிர்வீச்சுப்   பொருள்களைத்  தேடும்   நடவடிக்கை  முடுக்கி  விடப்படும்  எனப்  போலீஸ்   தெரிவித்துள்ளது.

“சந்தேகப்  பேர்வழிகள்   எங்கெல்லாம்    சென்றார்கள்    என்று   தெரிகிறதோ   அங்கெல்லாம்      செல்வோம்.  அணுவாற்றல்   துறை   நிபுணர்களின்   உதவியைக்  கொண்டு  அங்கு  கதிர்விச்சுப்     பொருள்  இன்னமும்   இருக்கிறதா  என்று   ஆராய்வோம்”,  எனப்  போலீஸ்  படைத்   தலைவர்  காலிட்  அபு  பக்கார்   கூறினார்.

“கதிர்வீச்சுப் பொருள்”  என்று   போலீஸ்  குறிப்பிடுவது  இதுவே   முதல்  முறையாகும்.

வட  கொரிய   அதிபர்   கிம்  ஜொங்- உன்னின்  ஒன்றுவிட்ட   சகோதரரான   கிம்   பிப்ரவரி  13-இல்  கேஎல்ஐஏ- இல்  தாக்கப்பட்டுக்  கொல்லப்பட்டார்.

அவரது  உடலில்  விஎக்ஸ்  என்னும்  வேதிப்பொருளின்  சுவடுகள் இருப்பது  தெரிய  வந்துள்ளது. விஎக்ஸ்  பேரழிவை  ஏற்படுத்தும்   வேதிப்பொருள்  என  ஐநா  வகைப்படுத்தியுள்ளது.

-ராய்ட்டர்ஸ்