இறந்துபோன என் தந்தை வாக்களிப்பதற்காக திரும்பி வந்தார்- அஸ்மின் கிண்டல்

azminவாக்காளர்   பட்டியல்  “களங்கமற்றதல்ல”   என்று  கூறிய   சிலாங்கூர்   மந்திரி  புசார்  அஸ்மின்   அலி,   2004-இல்    “வாக்களிப்பதற்கு   இறந்துபோன    என்   தந்தையே   திரும்பி   வந்திருந்தார்”   என்றார்.

இன்று  கோலாலும்பூர்   உயர்   நீதிமன்றத்தில்   சாட்சியமளித்த    அஸ்மின்,  தம்  தந்தையார்   1999-இல்   காலமானார்   என்றும்   ஆனால்,    அவருடைய   பெயர்   2004   வாக்காளர்  பட்டியலில்     இடம்பெற்றிருந்தது   என்று   கூறினார்.

“துரதிர்ஷடவசமாக     என்னால்   அவரைச்   சந்திக்க  முடியாமல்    போய்விட்டது”,  என்று   வழக்குரைஞர்   சிவராசா  சின்னையாவின்  கேள்விக்குப்   பதிலளித்தபோது   அஸ்மின்  கிண்டலடித்தார்.  அஸ்மின்,   முன்னாள்   எதிரணித்   தலைவர்   அன்வார்    vs  இளைஞர்   விளையாட்டு   அமைச்சர்   கைரி  ஜமாலுடின்    அவதூறு   வழக்கில்    சாட்சியமளித்தார்.

தந்தை  இறந்த   பின்னர்   தம்   தாயார்   தனியாகத்தான்    வசித்து    வந்தார்  என்றும்    ஆனால்   வாக்காளர்    பட்டியல்    அதே  முகவரியில்    சில    சீன,  இந்திய   வாக்காளர்கள்   இருப்பதாகக்   காண்பித்தது     என்றும்   அஸ்மின்   தெரிவித்தார்.