இரு சகோதரர்கள் தூக்கிலிடப்படுவது தள்ளிப்போடப்பட்டுள்ளது

Executionofbrotherspostponedகடைசி நேரத்தில் குடும்பத்தினரால் செய்யப்பட்ட கருணை முறையீட்டின் காரணமாக 12 ஆண்டுகளுக்கு முன்பு செய்த கொலைக் குற்றத்திற்காக இன்று நிறைவேற்றப்படவிருந்த இரு சகோதரர்களின் தூக்குத் தண்டனை தள்ளிப்போடப்பட்டுள்ளது.

பி ரமேஸ், 45, மற்றும் பி. சுதர், 40, ஆகிய இரு சகோதரர்களும் இன்று காலை மணி 6.00 க்கு காஜாங் சிறையில் தூக்கிலிடப்படவிருந்தனர். அது நிறைவேற்றப்படாமல் தள்ளிப்போடப்பட்டுள்ளதை அவ்விருவரின் தமக்கை உமா முத்துகிருஷ்ணன் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.

நேற்று, அவ்விரு சகோதரர்களும் அவர்களது 70 வயதான தாயாரும் நெகிரி செம்பிலான் ஆட்சியாளரிடம் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் (20 வருடம்) குறைக்கும்படி கருணை மனு தாக்கல் செய்தனர்.

12 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விருவருக்கும் போர்டிக்சனின் புரிந்த கொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. சட்டமுறைப்படி அவர்கள் மேற்கொண்ட அனைத்து மேல்முறையீடுகளும் தோல்வியில் முடிந்தன.

அவ்விரு சகோதரர்களின் புதிதாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர், எம். ஹரேஸ், நேற்று காஜாங் சிறை துணை இயக்குனருக்கு ஒரு மனு அனுப்பியிருந்தார்.

காஜாங் சிறைச்சாலை மற்றும் நெகிரி மாநில அரசு ஆகியவற்று அனுப்பட்ட மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக ஹரேஸ் கூறினார்.

அம்னெஸ்டி இன்டர்நேசனல் மலேசியாவின் செயல்முறை இயக்குனர் கே. சாமினி தர்ஷினி தூக்குத் தண்டனை நிறைவேற்றம் தள்ளிப்போடப்பட்டத்தை மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.