சிலாங்கூர் அம்னோ: மாநிலத்தை மீண்டும் கைப்பற்ற அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு நஜிப்பின் முடிவைப் பொறுத்தது

 

SelangorUMNOஎதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன் சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றமுடியுமா? 2008 மற்றும் 2013 பொதுத் தேர்தல்களில் பக்கத்தான் ரக்யாட் சிலாங்கூர் மாநிலத்தில் வெற்றி பெற்று ஆட்சியில் இருந்து வருகிறது.

ஆனால், இப்போது அரசியல் கூட்டணிகளில் மாற்றங்கள் தென்படுகின்றன. பக்கத்தான் ரக்யாட் வீட்சி கண்டுள்ளது. பாஸ் கட்சியின் தற்போதைய நிலை அம்னோவுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது.

பாஸ் பங்கு பெறாத பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியை தோற்கடிப்பதற்கு பாஸ் கட்சியுடன் சேர்ந்து வேலை செய்வதற்கு மாநில அம்னோவுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று சிலாங்கூர் அம்னோ தகவல் பிரிவு துணைத் தலைவர் மாட் நஸ்ரி அஹமட் டாலான் பின்பிபிசி தளத்திடம் பேசிய போது கூறினார்.

தனிப்பட்ட முறையில், அம்னோ மற்றும் பாஸ் ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பை வரவேற்பதாகக் கூறிய மாட் நஸ்ரி, இவ்விவகாரம் பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் ரசாக்கை பொறுத்தது என்றார்.

மக்களுக்குப் பலனளிக்கூடிய இந்தத் திட்டத்திற்கு நாங்கள் தயார் என்று கூறிய மாட் நஸ்ரி, “நாங்கள் தலைவர் கூறுவதைப் பின்பற்ற வேண்டியுள்ளது” என்றார்.