ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டருக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் முகநூலில் பதிவிட்டிருந்ததாக நம்பப்படும் 57-வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அவர்மீதான புகாரை அடுத்து போலீசார் அவரைக் கைது செய்தார்கள் என ஜோகூர் போலீஸ் தலைவர் வான் அஹ்மட் நஜ்முடின் முகமட் கூறினார். அந்த ஆடவரின் கருத்துகள் நாட்டின் இணக்கத்துக்கும் வளப்பத்துக்கும் மிரட்டல் விடும் வகையில் இருப்பதாக அவர் சொன்னார்.
1998 தொடர்பு, பல்லூடகச் சட்டம் பிரிவு 233(1) (ஏ)-இன்கீழ் அவர்மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அச்சட்டத்தின்கீழ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் ரிம50,000-க்கு மேற்போகாத அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.