பிரபல செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகை செய்தி விளக்கக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தடை

 

Whitehousebanசில பிரபல அமெரிக்க செய்தி நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகை செய்தி விளக்கக் கூட்டத்தில் கலந்துகொள்ள வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் தடை விதிக்கப்பட்டிருப்பதாக நேற்று பாதிக்கப்பட்ட செய்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூறினர்.

சிஎன்என், த நியு யோர்க் டைம்ஸ், பொலிடிகோ, த லோஸ் என்ஜிலஸ் டைம்ஸ் மற்றும் பஸ்பீட் ஆகியவற்றின் நிருபர்கள் ஊடகச் செயலாளர் சீன் ஸ்பைசரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தி விளக்கக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.

ஏன் இந்தக் குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது என்பது குறித்து சீன் ஸ்பைசர் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், அவரின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ராய்ட்டர்ஸ் மற்றும் சுமார் 10 செய்தி நிறுவனங்கள், புலும்பெர்க் மற்றும் சிபிஎஸ் உட்பட. அச்செய்தி விளக்கக் கூட்டத்தில் பங்குபெற அனுமதிக்கப்பட்டன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அடிக்கடி ஊடகங்களைச் சாடி வருகிறார். நேற்று, ஒரு மிதவாத ஆர்வலர்கள் கூட்டத்தில் பேசிய அவர் செய்தி நிறுவனங்களை சாடுகையில் அவை “போலியான செய்திகளை” தருகின்றன என்று கூறியதோடு அந்நிறுவனங்களை அமெரிக்க மக்களின் “விரோதி” என்று அவர் வர்ணித்தார்.