சிலாங்கூரில் தொகுதி உடன்பாடா? டிஏபியும் அமனாவும் மறுப்பு

khalidபக்கத்தான்    ஹராபானும்   பார்டி   பிரிபூமி   பெர்சத்து    மலேசியாவும்  சிலாங்கூரில்     தொகுதி    ஒதுக்கீடு  மீது   உடன்பாடு   கண்டுவிட்டதாகக்  கூறும்   செய்திகளை   பார்டி   அமனா   நெகரா  மறுக்கிறது.

ஹராபானும்      பெர்சத்துவும்    சிலாங்கூரில்   22   நாடாளுமன்ற   இடங்களுக்கும்   56  சட்டமன்ற   இடங்களுக்குமான    பேச்சுகளை  இன்னும்   தொடங்கவே   இல்லை     என்று   அமனா   தொடர்பு   இயக்குனர்  காலிட்   சமட்டும்     சிலாங்கூர்    டிஏபி    தலைவர்   டோனி   புவாவும்   கூறினர்.

“இது   நம்பத்தக்கதல்ல.  இது    பாஸுக்கு    ஆத்திரமூட்டி   பக்கத்தான்   ஹராபானுக்கும்    பாஸுக்குமிடையிலான   பேச்சுகள்    முறிந்து  போவதற்கு   வழிகோல    பிஎன்   மேற்கொண்டிருக்கும்   பிரச்சாரம்    என்று   நினைக்கிறேன்”,  என   காலிட்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

பிஎன்   வரும்   பொதுத்   தேர்தலில்   பாஸுடன்   கூட்டுச்  சேர்ந்து   சிலாங்கூரைத்   திரும்பக்   கைப்பற்ற   விரும்புகிறது  .  அது   நிகழாத   பட்சத்தில்    பிஎன்,  பாஸ்,  ஹராபான்   அல்லது   பெர்சத்துவுடன்  மும்முனைப்   போட்டியாவது   நிலவ   வேண்டும்    என்பது   அதன்   அடுத்த  விருப்பமாகும்   என்றாரவர்