பெட்ரோல் விலைகளை உயர்த்தியவர்களே ஆளும் கட்சியினர்தான். அப்படியிருக்க அவர்கள் இப்போது இலவச பெட்ரோல் கொடுக்க முன்வருவது அவர்களின் கபடத்தனத்தைத்தான் வெளிப்படுத்துகிறது என டிஏபி தலைவர் ஒருவர் சாடினார்.
இந்த விவகாரத்தில் பக்கத்தான் ஹராபான் ஒரு வகையில் திருப்தி கொள்ளலாம் என்று கூறிய ஜோகூர் டிஏபி தலைவர் லியு சின் தோங், வசதிக்குறைந்தோருக்கு இலவச பெட்ரோல் வழங்கும் பக்கத்தான் ஹராபான் பிரதிநிதிகளின் திட்டத்தைத்தான் பிஎன் “காப்பியடித்திருக்கிறது” என்றார்.
“(ஹராபானின் இலவச பெட்ரோல் ) ஜனவரியிலிருந்து உயர்ந்துகொண்டே வரும் பெட்ரோல் விலைமீது கவனத்தைத் திருப்பும் ஒரு நல்ல வழிமுறையாகும்.
“எங்கள் முயற்சி மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு உதவியது என்பதுடன் அதைக் கண்டு ‘வெட்கமுற்ற’ அம்னோ பிரதிநிதிகள் இலவச பெட்ரோல் வழங்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்”, என லியு இன்று கூலாயில் பக்கத்தான் ஹராபான் -பெர்சத்து மாநாட்டில் உரையாற்றியபோது கூறினார்.
“பெட்ரோல் விலையை உயர்த்தியவர்களே அவர்கள்தான். இப்போது பரிவு கொண்டவர்கள்போல் குறிப்பிட்ட அளவு பெட்ரோலை இலவசமாக வழங்குவதுபோல் நடிப்பது அம்னோ-பிஎன் எவ்வளவு கபடத்தனம் மிக்கது என்பதைக் காண்பிக்கிறது”, என்றாரவர்.
இந்த நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றத்திற்கு DAP தான் காரணம் இவர்களில் ஆட்கள் தான் சூது விளையாடும் மையம் , வட்டிக்கு பணம் குடுப்பது , விபச்சார மையம் , உடம்பு பிடித்து விடும் மையம் இன்னும் பல……. இதில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது நம் தமிழர்கள் தான்
ஐயா malayan அவர்களே– DAP யை குற்றம் சாட்டுவதை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் பிழைக்க தெரிந்தவர்கள்– அவர்களுக்கு எப்படி அரசிடம் பிச்சை கேட்காமல் வாழமுடியும் என்று தெரியும். நாம் அவர்களிடம் இருந்து எவ்வளவோ படித்துக்கொள்ள முடியும். அவர்களின் திறமையை மதிக்க வேண்டும்- இதே போல் அம்னோ நாதாரிகளை பற்றி கூற முடியுமா? நாட்டை சூறை ஆடியது யார்? நாம் முட்டாள்களாக இருப்பது யாருடைய தவறு? இன்னும் எவ்வளவோ– ஆதலின் தயவு செய்து சிந்தியுங்கள்– நானும் பல வகையில் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளேன் –ஆனாலும் இவங்களின் திறமையை பாராட்டவே கடமைப்பட்டுள்ளேன்-நியாயமாக பார்த்தால்.
ஆமாம் மிஸ்டர் மலாயன்..அய்யோ பாவம் …எல்லாவற்றுக்குமே ஜ.செ.க தான் காரணம் ஏனென்றால் மற்றவர்களுக்கு இந்த சூது வாது, வட்டிக்கு கொடுப்பது, விபச்சாரம், உடம்பு பிடித்து விடுவது எதுவுமே தெரியாது…அந்த மற்றவர்கள் எல்லோரும் அப்பழுக்கற்றவர்கள், சரிதானே? அப்படின்னா ஜ.செ.க வை ஒழித்து கட்டினால் மேலே சொன்னதெல்லாம் நடக்காது. நாடு சுத்தமாகி விடும்…விலைவாசி குறைந்து விடும், எல்லோரும் உத்தம புருஷர்களாகிவிடுவார்கள். லஞ்சம் ஊழல் அற்ற நாடாக நாம் நம் நாட்டை மாற்றிவிடுவோம்.. எல்லோருமே ஆளுக்கொரு கார் வீடு பெற்றுக் கொள்ளலாம்..நமக்கு இனி குடியுரிமைப் பிரச்சினை, அடையாளக் கார்டு பிரச்சினை என்று எந்த பிரச்சினயுமே இருக்காது. எவனும் நம்மை ‘கிளிங்’ என்று கேலி செய்ய மாட்டான், எவனும் நம் இனத்தையும் மதத்தையும் கேலி செய்யும் வகையில் நடந்து கொள்ள மாட்டான், இனி நமக்கு அரசாங்க வேலைகள் எந்த தடையுமின்றி கிடைக்கும், நம் இன மாணவர்களுக்கு பொது பல்கலைக்கழகங்களில் எந்த பிரச்சினயும் இன்றி உயர்கல்விக் கற்க இடம் கிடைத்து விடும்..அப்பாடா…இப்போதுதான் மனதுக்கு இதமாக நிம்மதியாக இருக்கிறது..மீண்டும் 1960-70-களில் நாம் வாழ்ந்த அந்த உன்னத வாழ்க்கையை மீண்டும் பெற்றுவிடலாம் சரியா?