கொரியர்போல் தோற்றமுள்ளவர் நடிப்பதற்கு ரிம400 கொடுத்தாராம்: பெண் கைதி கூறியதாக தூதர் கூறினார்

envoyவட  கொரிய   அதிபர்   கிம்  ஜோங்-உன்னின்   ஒன்றுவிட்ட  சகோதரர்  கிம்   ஜொங்-நாமைக்   கொலை   செய்த   குற்றத்துக்காகக்  கைது    செய்யப்பட்டிருக்கும்   இந்தோனேசியப்  பெண்ணிடம்   ஜொங்-நாம்   முகத்தில்   ‘குழந்தை   எண்ணெயை’த்   தடவுவது  குறும்புத்தனம்   மிக்க   ஒரு    தொலைக்காட்சி   ரியல்டி   ஷோவில்   வரும்   காட்சியாகும்    என்று  கூறப்பட்டிருக்கிறது.    அதில்   நடிக்க  அவருக்கு   ரிம400   கொடுக்கப்பட்டதாம்.

அப்படித்தான்   அப்பெண்   இந்தோனேசியாவின்   இடைக்காலத்    தூதர்    எண்ட்ரியானோ  எர்வினிடம்   கூறியுள்ளார்.   இந்தோனேசிய   தூதர்   இன்று    சைபர்   ஜெயா   போலீஸ்   நிலையத்தில்   அப்பெண்ணைச்   சென்று   கண்டார்.

அவரைச்   சந்தித்த  பின்னர்    செய்தியாளர்களிடம்   பேசிய     எண்ட்ரியானோ,  அந்த  வேலையைச்   செய்யுமாறு   கேட்டுக்கொண்டு  “ஜப்பானியரையும்   கொரியர்களையும்போல்   தோற்றமளித்த”  பலர்   அவரை    அணுகி  இருக்கிறார்கள்    என்றார்.

அவர்களில்  ஜேம்ஸ்   அல்லது   சாங்   என்ற  பெயரில்       அறிமுகமான  ஒருவர்தான்  ரிம400  கொடுத்து   ஜோங்-நாம்  முகத்தில்   திரவத்தைத்    தடவச்   சொல்லியிருக்கிறார்.  அது  ஆபத்தான   திரவம்   என்பது தனக்குத்     தெரியாது     என்றவர்  சொன்னாராம்.

அது   எல்லாமே  தொலைக்காட்சி   ரியல்டி   ஷோ   ஒன்றுக்காக    செய்யப்படுவதாக   அம்மனிதர்   அப்பெண்ணிடம்   தெரிவித்துள்ளார்    எனத்   தூதர்  கூறினார்.

பெண்ணிடம்   விஷத்தன்மை  பாதிப்புக்கான    அடையாலம்   எதுவும்   தென்பட்டதா   என்று   வினவியதற்கு   அவர்   நன்றாக   இருப்பதுபோல்தான்   காணப்பட்டார்   என்றும்   பிரச்னை   எதுவுமின்றித்   தம்முடன்   உரையாடினார்   என்றும்   எண்ட்ரியானோ   கூறினார்.  அத்துடன்   அவரின்  உடலில்   விஷமேறியுள்ளதற்கான   அடையாளம்   உள்ளதா   என்று தாம்   தேடிப்  பார்க்கவில்லை   என்றும்   அவர்   குறிப்பிட்டார்.