ஜோகூர் சுல்தானின் கடிந்துரைக்கு ஆளான பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து)வின் தலைவர் முகைதின் யாசின் தாம் ஜோகூர் மாநிலத்தின் மந்திரி புசாராக இருந்த காலத்தில் ஆற்றிய சேவையைத் தற்காத்துள்ளார்.
தாம் ஓர் இறுமாப்புக்காரர் என்று பிரதமர் நஜிப்பின் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட பின்னரே குற்றம் சாட்டப்பட்டுள்ளேன். ஆனால், தாம் செய்ததெல்லாம் நாட்டையும் நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாத்ததுதான் என்று முகதின் யாசின் அவரது அதிகாரப்பூர்வ முகநூலில் வெளியிட்டுள்ள திறந்த கடிதம் ஒன்றில் எழுதியுள்ளார்.
தாம் அதைச் செய்ததற்காக தாம் இறுமாப்புக்காரர் என்று குற்றம் சாட்டப்பட வேண்டுமானால், அப்போது மக்கள்தான் நீதிபதியாக இருக்க வேண்டும் என்றாரவர்.
“தேசிய மற்றும் மாநில இறையாண்மையைத் தற்காக்கும் பொருட்டு ஃபோரஸ்ட் சிட்டியிலுள்ள நிலத்தை அந்நிய நாட்டினருக்கு விற்பதை குறைகூறிய பின்னர் நான் ஆணவமும் இறுமாப்பும் கொண்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளேன்.
“நான் இதுவரையில் செய்ததெல்லாம் நஜிப் உருவாக்கிக் கொண்டிருக்கும் இழப்பிலிருந்து மக்களையும் நாட்டையும் தற்காப்பதுதான்.
“நான் உண்மையை நிலைநிறுத்தப் போராடுவதும் நம்பிக்கைத் துரோகத்தை எதிர்ப்பதும் மக்களின் மற்றும் நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்காகும். அதன் காரணமாக நான் ஆணவமும் இறுமாப்பும் கொண்டவர் என்றால், அப்போது மக்கள் நீதிபதியாக இருக்க வேண்டும்”, என்று ஜோகூர் சுல்தான் நேற்று தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய முகைதின் யாசின் கூறினார்.
சபாஷ் ! சரியான போட்டி !
அடடே…யார் சொன்னது இறுமாப்புக்காரன் என்று?
நான் முதலில் ஒரு மலாய்க்காரன் பிறகு தான் நான் ஒரு மலேசியன் என்று சொன்னது இறுமாப்பா? பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் இப்படி எகத்தாளமாகக் கூறுவது இறுமாப்பா? யார் சொன்னது?
இதைத்தான் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்று அன்றே சொல்லிவிட்டார்கள் எங்களது முன்னோர்