கடந்த சனிக்கிழமை பெர்சத்து அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் ரிபோர்மாசி நிகழ்வு ஒன்றில் அழையா விருந்தாளியாகக் கலந்து கொண்டதன் உள்நோக்கமே சிறையில் உள்ள அன்வார் இப்ராகிமை மேலும் ஒழிப்பதுதான் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.
மகாதிர் அன்வாருடன் சமரசம் செய்து கொண்டிருந்தாலும்கூட அன்வாரை அடியோடு “ஒழிக்கும்” நோக்கம் அவருக்குள் இன்னும் இருக்கிறது என சிறப்பு விவகாரத் துறை (ஜாசா) தலைமை இயக்குனர் முகம்மட் புவாட் ஸர்காஷி கூறினார்.
ரிபோர்மாசி என்பதே மகாதிருக்குப் பிடிக்காத சொல் என்று கூறிய அவர் மகாதிர் அந்நிகழ்வில் கலந்துகொண்டது அன்வார் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளது என்றார்.