சவூதியிலும் பிரிம், ஜிஸ்டி, நஜிப் பெருமிதம்

 

Saudistooபிரிம் உதவி மற்றும் ஜிஎஸ்டி வரி விதித்தல் ஆகியவற்றை நியாயப்படுத்திப் பேசிய பிரதமர் நஜிப், அது போன்ற உதவி மற்றும் வரி விதிப்பு கொள்கைகளைப் பின்பற்ற சவூதி அரேபியாவும்கூட திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

சவூதி அரேபிய மன்னருடன் வந்திருக்கும் அரேபிய அமைச்சர்களுடன் பேசிய போது இதைப்பற்றி தெரிந்து கொண்டாதாக நஜிப் தெரிவித்தார்.

“முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் பிரிம் ஒரு வகையான ஊழல் என்று கூறிக்கொண்டுள்ளார், அப்படியானால் அது எப்படி சவூதி அரேபியா செய்வதிலிருந்து வேறுபட்டதாக இருக்க முடியும்?

“அதனால்தான் அதை அரசியாலாக்காதீர் என்று கூறினேன். பிரிம் ஊழல்ல, அது ஏழ்மையானவர்களுக்கு உதவி அளிப்பதாகும்.

“பிரிம்மை பெற்றுக்கொள்பவர்கள் பிஎன்னை ஆதரிக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னதில்லை”, என்று நஜிப் இன்று கோலாலம்பூரில் கூறினார்.

அதுமட்டுமல்ல. சவூதி அரேபியா விரைவில் ஜிஎஸ்டி வரியை அறிமுகம் செய்யப் போகிறது. அதை மலேசியா 2015 இல் அமல்படுத்தியது.

“சவூதி அரசாங்கம் விரைவில் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தப் போகிறது. அப்படியென்றால் நாம் செய்தது தவறல்ல.

“சவூதி அரேபியா எண்ணெய் வளமிக்க நாடாக இருந்தும் அது ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்துகிறது. ஆகவே, ஜிஎஸ்டி இருப்பது நியாயமானதே”, என்று பிரதமர் நஜிப் கூறினார்.