மலேசியாவில் உள்ள ஒரே ஒரு வட கொரிய உணவகம்

koryoஅது   ஒன்றும்   ஆடம்பரமான    உணவகமோ   படாடோபம் மிக்க   உணவகமோ   அல்ல,   ஆனாலும்   கிம்  ஜோங்-நாம்  கொலையை     அடுத்து      ஊடகங்களின்   தீவிர   கவனத்தைப்   பெற்ற    உணவகமாக      விளங்குகிறது.  காரணம்,   மலேசியாவில்  உள்ள  ஒரே   ஒரு     வட  கொரிய  உணவகம்   அதுதான்.

கொரியோ   உணவகம்,  பரபரப்புமிக்க   இம்பி   வட்டாரத்தில்,  புக்கிட்   பிந்தாங்கிலிருந்து   ஒரு   கிலோமீட்டர்    தொலைவில்   உள்ளது.

வட   கொரியா,    முதன்முதலாக  அதன்   உணவகத்தை   பியோங்யாங்   உணவகம்   என்ற   பெயரில்   அம்பாங்கில்தான்   திறந்தது   என    சீனாவின்   சின்  ஹுவா    செய்தி   நிறுவனம்    கூறுகிறது.

சில  ஆண்டுகளுக்குப்  பிறகு    அது   மூடப்பட்டு   கொரியோ   உணவகம்   திறக்கப்பட்டதாம்.

கொரியோ   உணவகம்   ஒவ்வொரு   நாளும்   காலை   மணி   11.30-இலிருந்து   பிற்பகல்   3.30 வரையிலும்   பிறகு   மாலை    மணி   5.30-இலிருந்து   இரவு   11.30 வரையிலும்   திறந்திருக்கும்.