எண்ணெய் வளமிக்க சவூதி அராபியாவே எண்ணெய் விலையை 50 விழுக்காடு உயர்த்தியது ஆனால், மலேசியர்கள் எண்ணெய் விலை 20 சென் உயர்த்தப்பட்டதையே பெரிதுபடுத்துகிறார்கள் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
“சவூதி அராபியா எண்ணெய் விலையை 50விழுக்காடு உயர்த்தியது.
“இங்கு 10 சென் 20 சென் உயர்ந்தால் போதும் கூப்பாடு போடுகிறோம்”. நஜிப் இன்று, கோலாலும்பூரில் கிரிஞ்சி அடுக்ககம் உடைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரெசிடென்சி கிரிஞ்சியில் வீடு வாங்கியிருப்போரிடையே உரையாற்றினார்.
“யாரும் மக்களைக் குழப்ப வேண்டாம், தூண்டிவிட வேண்டாம், அரசாங்கம் எதைச் செய்தாலும் நாட்டின் நீண்ட, குறுகிய கால நலனைக் கருத்தில்கொண்டே செய்கிறது”, என்றாரவர்.
அங்குள்ள அன்றாட வாழ்க்கைத் தரம், அன்றாட வாழ்க்கைச் செலவினங்கள், அவர்களின் பணவீக்கம், அவர்களின் மாதாந்தரச் சம்பளம் இப்படி எல்லாவற்றையும் ஒப்பிடு, உமக்குத் தேவையானதை மட்டும் ஒப்பிடாதீர்…ஒருமுறை லிட்டருக்கு 70-காசுகள் உயர்த்தப்பட்டதே..மறந்து போச்சா? மீண்டும் லிட்டருக்கு ஒரு 70-காசுகள் உயர்த்தி பாருங்களே. நாங்கள் வேண்டாம் என்றா சொல்லப்போகிறோம்.
தலைவா,
அங்கே 50 சென் மட்டும்தான் உயர்ந்தது.
இங்கே 10, 10, 20, 20 என்று 60 சென் உயர்ந்து விட்டதே. நாளைக்குப் பிறகு இன்னும் எத்தனை சென் உயரப்போகிறது என்று தெரியவில்லையே.