சவூதி அராம்கோவும் பெட்ரோனாஸும் ரிம7 பில்லியன் முதலீட்டு ஒப்பந்தத்தில் நாளை கையொப்பமிடுகின்றன என்று பிரதமர் நஜிப் கூறினார்.
இன்று காலையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு சவூதி அரேபிய மன்னர் வருகையின் மிகச் சிறந்த அம்சமாகும். இந்த யுஎஸ்7 பில்லியன் முதலீடு மிகப் பெரிய மற்றும் பொருள் செறிந்த முதலீடாகும்”, என்று நஜிப் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இது நமது நாட்டின் இறையாண்மையை சவூதி அரேபியாவுக்கு விற்பதல்ல.
“நாம் சீனாவுக்குச் சென்றால், நாம் நமது இறையாண்மையை சீனாவுக்கு விற்றுவிட்டதாக குற்றம் சாட்டுவார்கள். இப்போது சவூதி அரேபியா இங்கு முதலீடு செய்வதால் நாம் நமது இறையாண்மையை சவூதி அரேபியாவுக்கு விற்று விட்டோம் என்று கூறுவார்களா என்று நஜிப் கேட்டார்.