இந்திய மாணவர்களை இழித்துரைத்தார் என்று கூறப்படும் விரிவுரையாளரை மலாயாப் பல்கலைக்கழகம் உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என மலேசிய இந்தியர் முற்போக்குச் சங்கம் (மிபாஸ்) கோரிக்கை விடுத்துள்ளது.
அவரை இடைநீக்கம் செய்வது அல்லது இடமாற்றம் செய்வது போதாது. அது அப்படிப்பட்ட செயல் ஏற்கத்தக்கதல்ல என்ற செய்தியை வலியுறுத்துவதாக அமையாது என மிபாஸ் குறிப்பிட்டது.
“கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை என்பதால் அப்படிப்பட்ட சம்பவங்கள் பள்ளிகளிலும் உயர்க் கல்விக் கழகங்களிலும் திரும்பத் திரும்ப நடக்கின்றன.
“விரிவுரையாளர்கள் நல்ல முன்மாதிரியாக நடந்துகொண்டு சகிப்புத்தன்மை, ஒற்றுமை ஆகியவற்றை வளர்க்க ருக்குன்நெகரா கோட்பாடுகளை நிலைநிறுத்த வேண்டுமே தவிர பல்கலைக்கழகங்களில் இனவாதத்துக்கு இடம்தரக்கூடாது”, என மிபாஸ் தலைமைச் செயலாளர் எஸ். பாரதிதாசன் கூறினார்.
குறிப்பிட்ட விரிவுரையாளர் இந்திய மாணவர்கள், ‘காப்பி அடிப்பார்கள், மற்றவர்களின் படைப்புகளை அப்படியே அனுமதியின்றிப் பயன்படுத்திக் கொள்வார்கள்’ என்று கூறி அவர்களை ஒன்றாக அமரவிட மாட்டாராம். அவர்மீதான குற்றச்சாட்டை விசாரிக்க யுஎம் ஐவரடங்கிய குழுவொன்றை அமைத்துள்ளது.
காப்பி அடிப்பது , பிறர் ஆய்வுகளை சற்று திருத்ததுடன் தன்
படைப்பாக காட்டிக்கொள்வது ,இவைகளெல்லாம் உலகிலுள்ள எல்லா உயர் கல்வி கூடங்களில் அவ்வப்போவது நிகழ்வதுண்டு !
இதில் இந்தியர்களை மட்டும் குறிப்பிடுவது ஏன் ?
ஒரு கால் அந்த விரிவுரையாளரும் இப்படி காப்பி அடித்துத்தான்
விரிவுரையாளராக பதவி உயர்வு பெறறாரோ என்னவோ ????
மலாய்க்கார மாணவர்களை பற்றி சொன்னால் அம்னோ பொங்கி எழும்! மலாய் மாணவர்கள் என்று சொல்லுவதற்கு பதிலாக இந்திய மாணவர் என்று மறைமுகமாக சொல்லுகிறார்! ம.இ.கா. பொங்குவது பொங்கலோடு சரி!