ஜொங்-நாம் வழக்கு பற்றிப் பேச போலீசுக்கும் சாட்சிகளுக்கும் தடையாணை

caseகிம்  ஜொங்-நாம்  கொலை   வழக்குக்  குறித்து  பொலீசும்   சாட்சிகளும்  பொதுமக்களிடமும்   ஊடகங்களிடம்   பேசுவதற்குத்   தடை   விதிக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட   இந்தோனேசியப்   பெண்   சித்தி   ஆயிஷா வின் வழக்குரைஞர்   கூய்   சூன்   செங்    மனுச்   செய்ததை   அடுத்து   சிப்பாங்   மெஜிஸ்ட்ரேட்   நீதிமன்றத்தின்   மெஜிஸ்ட்ரேட்    அந்தத்   தடை  உத்தரவைப்  பிறப்பித்தார்.

“போலீசும்  வழக்கில்   சாட்சியமளிக்கும்    சாத்தியமுள்ளவர்களும்  பொதுவில்   பேசுவதற்குத்   தடை  விதிக்க   வேண்டும்    எதிர்த்தரப்பு    விரும்புகிறது.  அது  என்  கட்சிக்காரருக்கு   அல்லது   எதிர்த்தரப்புக்குப்    பாதகமாக   அமையும்.

“வழக்குவிசாரணை  நியாயமாக   நடக்க   வேண்டும்   என்பதற்காக   அவ்வாறு   கேட்டுக்கொள்கிறோம்”,  என  கூய்    நீதிமன்றத்தில்   கூறினார்.