முன்னாள் பெல்டா உயர் அதிகாரிகள்மீது சிபிடி குற்றச்சாட்டு

feldaபெல்டாவின்   முன்னாள்   உயர்   அதிகாரிகள்   இருவர்,  2014-இல்   ரிம47.6 மில்லியன்  ரிங்கிட்டை    நம்பிக்கை   மோசடி   செய்ததாக   இன்று   குற்றஞ்சாட்டப்பட்டனர்.

பெல்டாவின்  முன்னாள்   துணை    மேலாளர்   முகம்மட்   சுபி   மஹ்பூப்மீது   இரண்டு   நம்பிக்கை   மோசடிக்   குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டன.  அவருக்கு   உடந்தை   என்று  பெல்டா  முன்னாள்   பொது   மேலாளர்   பைசூல்   அஹமட்   குற்றம்  சுமத்தப்பட்டார்.

முகம்மட்   சுபி,  பெல்டா   வாரியம்   அல்லது   டெண்டர்   குழுவின்   ஒப்புதலின்றி   ரிம25. 999  மில்லியன்  பணக்கொடுப்புக்கு   அனுமதி   அளித்ததாக     குற்றம்  சுமத்தப்பட்டது.

2014  ஜனவரி   13-க்கும்  ஜனவரி  24-க்குமிடையில்   அவர்   அக்குற்றத்தைப்   புரிந்தாராம்.

அத்துடன்,   மார்ச்   31க்கும்    ஜூலை   23க்குமிடையில்    மேலும்   ரிம21.63  மில்லியன்  பணக்கொடுப்புக்கும்   வாரியம்   அல்லது    டெண்டர்  குழுவின்   ஒப்புதலின்றி   அவர்   அனுமதி    அளித்திருக்கிறார்.

குற்றவியல்    சட்டம்   409-இன்கீழ்   குற்றஞ்சாட்டப்பட்ட    அவர்   குற்றவாளி   என்று   நிறுவப்பட்டால்   இரண்டிலிருந்து   20ஆண்டுவரை   சிறைத்தண்டனை  விதிக்கப்படலாம்.  பிரம்படியும்   உண்டு.

முகம்மட்  சூபிக்கு  உடந்தையாக    இருந்த   பைசூல்   குற்றவியல்   சட்டம்   109-இன்கீழ்   குற்றஞ்சாட்டுள்ளார்.   அச்சட்டம்   20  ஆண்டுவரை   சிறைத்தண்டனையும்  பிரம்படியும்  கொடுப்பதற்கு  வகை   செய்கிறது.