மார்ச் 6-இலிருந்து மலேசியாவுக்கு வருகை புரியும் வட கொரியர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனத் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று அறிவித்தார்.
தேசிய பாதுகாப்பை முன்னிட்டு எடுக்கப்பட்ட இம்முடிவு விரைவில் அரசிதழில் அறிவிக்கப்படும் என ஜாஹிட் கூறினார்.
உள்துறை அமைச்சர் என்ற முறையில் ஜாஹிட் அம்முடிவை எடுத்தார்.
இதற்கு முன்னர் வட கொரியர்கள் மலேசியாவுக்குள் நுழைய விசா தேவையில்லை, கடப்பிதழ் மட்டும் போதும்.
-பெர்னாமா
இனி வட கொரியர்கள் கள்ளக்குடியேறிகளாய் நாட்டிற்குள் படையெடுக்க போவதை தடுக்கமுடியாது.