பினாங்கு அரசாங்கம் முஸ்லிம்-அல்லாதார் வழிபாட்டு இல்லங்கள் கட்டுவதற்காக 20 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
அதில் துண்டுபோட்டு விற்கப்பட்டும் நிலத் தொகுதிகளை முஸ்லிம்- அல்லாத நிறுவனங்கள் விலைக்கு வாங்கலாம்.
பாகான், பட்டர்வர்த்தில் ஒதுக்கப்பட்டுள்ள அந்த 20 ஏக்கரும் 32 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக லிம் கூறினார்.
மிகச் சிறியது 6,000 சதுர அடி, மிகப் பெரியது ஒர் ஏக்கர்.
“தேவாலயம், கோயில்கள் போன்ற இறை இல்லங்கள் கட்ட போதுமான இடமில்லை என்று முஸ்லிம்- அல்லாதார் அமைப்புகள் புகார் செய்திருப்பதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது”, என லிம் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
வழிபாட்டு மையங்கள் கட்டப்படுவதற்கான நிலம் என்பதால் விலையும் அதிகமாக இருக்காது என்றாரவர்.
தே. மு. அரசாங்கம் ஆண்ட போது இத்தகைய அன்பான செயலைக் காண்பது அரிது. பினாங்கு மாநில அரசாங்கத்தின் இத்தகைய அன்பு கூர்ந்த செயலை வரவேற்கின்றோம்.
தே. மு. அரசாங்கத்தில் முஸ்லீம் அதிகமாக இருப்பதால் அதன் முஸ்லிம் தலைவர் தேவாலயங்கள், கோயில்களுக்கு நன்கொடை, நிலம் வழங்குவது ‘HARAM’ என்பது அவர்களது வியாக்கியானம்.