ஜோகூர் எம்பியும் விடுப்பில் செல்வாரா?, கிட் சியாங் கேட்கிறார்

 

JohoreMBஜோகூர் மாநில நிலம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் அனைத்தும் இறுதியில் மந்திரி புசாரின் கவனத்திற்கு உட்பட்டதாகும். இப்போது நிலப்பட்டா மாற்றம் செய்யப்படுவதில் ஊழல் இருப்பது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்எசிசி) விசாரணை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக ஜோகூர் மந்திரி புசார் காலிட் நோர்டின் விடுப்பில் செல்ல வேண்டும். அதனை அவர் செய்வாரா?

ஜோகூரில் பூமிபுத்ரா வீட்டு மனை நிலங்கள் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு மாற்றப்படுவதில் பல மில்லியன் ரிங்கிட்கள் சம்பந்தப்பட்ட ஊழல்கள் பற்றி டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.

எம்எசிசி ஆறு பேரை கைது செய்துள்ளது. அதில் ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் லத்தீப் பாண்டியின் மகன் மற்றும் அவரது சிறப்பு அதிகாரியும் அடங்குவர்.

21 சொகுக் கார்கள், 5 விலையுயர்ந்த மோட்டார் பைக்குகள் மற்றும் ரிம500,000 ரொக்கமும் கைப்பற்றப்பட்டதோடு ரிம15.5 மில்லியன் மதிப்புள்ள 45 கணக்குகள் முடக்கப்பட்டன.

எம்எசிசி விசாரணை மேற்கொண்டுள்ளதைத் தொடர்ந்து அப்துல் லத்திப் விடுப்பில் சென்றுள்ளார்.

அப்துல்ல லத்தீப் செய்ததைப் போல் மந்திரி புசார் காலிட்டும் விடுப்பில் செல்வாரா என்று கிட் சியாங் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுள்ளார்.