கைதான வட கொரியர் விடுவிக்கப்பட்டு நாடு கடத்தப்படுவார்

releaseகிம் ஜொங்-நாம்  கொலை   தொடர்பில்   தடுத்து   வைக்கப்பட்ட    வட    கொரிய   ஆடவர்    நாளை   விடுவிக்கப்பட்டு    நாடு   கடத்தப்படுவார்    எனச்   சட்டத்துறைத்  தலைவர்   முகம்மட்  அப்பாண்டி   அலி    கூறினார்.

ரி   ஜோங்   சோலைக்  குற்றம்   சாட்ட    போலீசிடம்   போதுமான    ஆதாரங்கள்   இல்லை    என   அபாண்டி    சிஎன்என்-னிடம்   கூறினார்.

வட  கொரிய   அதிபர்   கிம்  ஜொங்- உன்னின்   ஒன்றுவிட்ட    சகோதரரான   ஜொங்- நாம்   பிப்ரவரி   13-இல்   கேஎல்ஐஏ-இல்   கொல்லப்பட்டார்.

அக்கொலை   தொடர்பாக  நான்கு   வட   கொரியர்களையும்   எந்த  நாட்டினர்   என்று  அடையாளம்   காணப்படாத   மேலும்  மூவரையும்   போலீசார்   தேடி   வருகின்றனர்.

அதற்கிடையில்   ஜொங்-நாமைக்   கொன்றதாக    இந்தோனேசிய   பெண்  ஒருவரும்   வியட்னாமிய   பெண்  ஒருவரும்   நேற்று    குற்றம்   சாட்டப்பட்டனர்.

ஜொங்-நாமின்  அடையாளத்தை    உறுதிப்படுத்த    டிஎன்ஏ   மாதிரிகள்   கிடைக்காதவரை   அவரின்  உடலை      வட   கொரியாவிடம்     ஒப்படைக்கப்  போவதில்லை    என   அதிகாரிகள்   தெரிவித்துள்ளனர்.