பிரம்பு அடி தண்டனை எப்படி இருக்கும்?, செய்து காட்ட கிளந்தான் ஆலோசிக்கிறது

 

Publiccanningஷரியா சட்டம் 355 இன் கீழ் விதிக்கப்படும் பிரம்பு அடி தண்டனை எப்படி இருக்கும் என்பது பற்றி மக்களுக்குச் செயல் விளக்கமளிப்பது குறித்து கிளந்தான் அரசு ஆலோசித்து வருகிறது.

இச்செயல் விளக்கத்தின் நோக்கம் தண்டனை எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வைப்பதாகும் என்று கிளந்தான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் ஃபாட்ஸ்லி கூறினார்.

புரிந்துணர்வையும் சரியான புலப்பாட்டையும் ஊக்குவிப்பதற்காக இஸ்லாத்தில் எப்படி பொதுமக்கள் முன்பு பிரம்படி கொடுக்கப்படுகிறது என்பதற்கு செயல் விளக்கம் அளிப்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம் என்றாரவர்.

“தண்டனை அறிவு புகட்டுவதற்கு மட்டும்தான் … வலியுண்டாக்குவதற்கு அல்ல”, என்று ஃபாட்ஸ்லி இன்று கோலாலம்பூரில் கூறினார்.

பாஸ் கட்சி மேற்கொண்டுள்ள முயற்சிகள் அனைத்தும் தண்டனை அளிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பலர் கூறுவதாக அவர் குறைபட்டுக்கொண்டார்.

“கிளந்தான் அரசு செய்வதெல்லாம் தண்டனை மீது கவனம் செலுத்துவது மட்டும்தான் என்று அவர்கள் கூறிக்கொள்கிறார்கள், இஸ்லாம் தண்டனை அளிப்பதற்காக மட்டும் இருப்பது போல”, என்று அவர் மேலும் கூறினார்.