நேற்றிலிருந்து சீனியின் விலை ஒரு கிலோவுக்கு 11 சென் அதிகரிக்கப்பட்டிருப்பதை உள்நாட்டு வாணிக அமைச்சு அதன் முகநூல் வழி இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. புதிய விலை ஒரு கிலோ ரிம2.95 ஆகும்.
கடந்த 2013 ஆண்டு ஆகஸ்ட் 25 க்குப் பிறகு இப்போதுதான் சீனி 11 சென் விலை உயர்வு கண்டுள்ளது. இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் உலகச் சந்தையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்தி செய்யப்படாத சீனியின் விலை பெருமளவில் ஏற்றம் கண்டுள்ளதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அரசாங்கம் சீனியின் விலையை இன்னும் கட்டுப்பாட்டில், மிகக் குறைந்த அளவில், வைத்திருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
முன்பு சீனி விலை கிலோ ஒன்றுக்கு இருபது காசுகள் உயர்ந்த போது அதை வரவேற்றுப் பேசிய நம்ம சு. அமைச்சர் அந்த விலை உயர்வு நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் என்றார். ஆனால் அந்த விலையேற்றம் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையை எந்த அளவுக்கு கட்டுப்படுத்தியது என்று அவரும் சொல்லவில்லை. அடுத்தடுத்து அவரை சந்தித்த எந்த ஊடக மரமண்டையும் அது பற்றிக் கேட்கவே இல்லை. இப்போது பதினோரு காசுகள் உயர்ந்திருப்பதை என்ன சொல்லி வரவேற்கப்போகிறார் நம்ம சு அமைச்சர்?
அது சரி…ஜி.எஸ்.டி யை ஆதரித்து அதை அறிமுகப்படுத்திய நம் நம்பிக்கைக்குரிய பெரியண்ணன் ஜி.எஸ்.டி வரவால் பொருட்களின் விலைகள் குறையும் என்றார். ஆனால் என்ன என்ன பொருள்கள் விலை குறைந்தன என்பதை அவர் இன்னும் விளக்கவில்லை. உண்மையில் பொருள் விலை குறைந்திருக்க வேண்டும் காரணம் ஜி.எஸ்.டிக்கு முன்பு இருந்த 7% விழுக்காடு பொருள் விறபனை வரி அகற்றப்பட்டிருக்க வேண்டும்..ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆக இப்போது நாம் 13% வரி (முன்பிருந்த பொருள் விற்பனை வரி 7% + இப்போதுள்ள 6% பொருள் சேவை வரி) மலேசியர்களுக்கு ஞாபக மறதி அதிகம் என்பது உண்மைதானே…
டான் ஸ்ரீ ராபர்ட் குவோக் வசம் உள்ள வரையில் சீனி விலை கட்டுப்பாட்டில் இருந்தது. எப்போது எப்ஜிவி (FGV) கைவசம் மாற்றம் கண்டதோ சீனி விலையும் லாலான் போல் விலையேற்றம் கண்டு வருகிறது. பெரு நட்டம் கண்டுவரும் எப்ஜிவியை கறை சேர்க்கவே இந்த விலையேற்றம் போல் தோணுகிறது… கொள்ளையன் இருக்கும்வரை கொள்ளை போவதை தடுக்க இயலாது!!!!
நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறீர்கள் நாங்க தான் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிட்டுவிட்டு வீடும் ஆஸ்பத்திரியுமாய் அழைகிறோம்!!
பணம் சம்பாரிக்க தெரிவில்லை என்றால் ஆளும் அரசாங்கத்திடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இந்நாட்டின் பொருளாதாரத்தைச் சிறப்பாக கையாளுகின்றார்கள்!
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அரசாங்கம் சீனியின் விலையை இன்னும் கட்டுப்பாட்டில், மிகக் குறைந்த அளவில், வைத்திருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அப்படியானால் மறுபடியும் விலை உயரும் என்பதை நாசூக்காக சொல்லிவிட்டார்கள்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அரசாங்கம் சீனியின் விலையை இன்னும் கட்டுப்பாட்டில், மிகக் குறைந்த அளவில், வைத்திருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அப்படியானால் மறுபடியும் விலை உயரும் என்பதை நாசூக்காக சொல்லிவிட்டார்கள்.