வீடமைப்பு அமைச்சராக அதிகாரமீறலில் ஈடுபடவில்லை- ரஹ்மான் டஹ்லான்

dahlanபிரதமர் துறை   அமைச்சர்    அப்துல்   ரஹ்மான்   டஹ்லான்    நகர்புற   நல்வாழு,   வீடமைப்பு,  ஊராட்சி   அமைச்சராக    இருந்தபோது   பிஎச்எல்  குழுமத்திற்கு  கொண்டோக்கள்  கட்டி  முடிக்கும்  காலத்தை   நீட்டிக்கொடுத்து(இஓடி)   அதிகாரத்தைத்  தவறாகப்  பயன்படுத்தினார்   என்று  கூறப்படுவதை  மறுத்தார்.

“டிஏபி  குறிப்பிடும்   அவ்விவகாரத்தில்   நான்  வீடமைப்பு  அமைச்சராக   இருந்தபோது    அதிகாரமீறல்   எதுவும்   நிகழவில்லை.

“சட்டம்  118  அமைச்சருக்கு    அளிக்கும்   அதிகாரத்தை   அடிப்படையாக   வைத்துத்தான்    நான்   அம்முடிவைச்   செய்தேன்”, என்றாரவர்.

இஓடி   அளித்தது   தகுதியின்   அடிப்படையில்தான்,  சிபாரிசு   கடிதங்கள்   காரணமல்ல  என்றும்  அவர்  குறிப்பிட்டார்.

அப்துல்  ரஹ்மானுக்கும் ,  சட்டத்துறைத்   தலைவர்   பரிடா   பேகம்   கே.ஏ. அப்துல்   காதருக்கும்   எதிராக   போலீஸ்   புகார்கள்  செய்யப்பட்டிருப்பது   நேற்று  பினாங்கு   துணை  முதலமைச்சர்   II பி.இராமசாமி     கூறியிருப்பது   குறித்துக்  கருத்துரைத்தபோது    அப்துல்   ரஹ்மான்   இவ்வாறு   கூறினார்.

செவ்வாய்க்கிழமை   டிஏபி   நாடாளுமன்றத்  தலைவர்   லிம்  கிட்   சியாங்   பிஎச்எல்  குழும   நிறுவனங்கள்    மேற்கொண்டிருந்த   இரண்டு   திட்டங்களுக்கு  இஓடி   கொடுக்குமாறு     கேட்டுக்கொண்டு   பரிடா   அப்துல்   ரஹ்மானுக்குக்  கடிதம்   எழுதியதாகக்  கூறியிருந்தார்.