முன்னாள் அமைச்சர் ஒருவர் சாபா சிஎம் ஆவதற்கு ஆசைப்பட்டாராம்: நஜிப் கூறுகிறா

najibஎதிர்கட்சித்  தலைவராக  உள்ள     முன்னாள்  அமைச்சர்   ஒருவர்   தம்மை  சாபா  முதலமைச்சராக்கும்படி   கேட்டுக்கொண்டதாக   நஜிப்  அப்துல்   ரசாக்   கூறினார்.

சிஎம்  ஆவது   அந்த   முன்னாள்  அமைச்சரின்   தணியாத   தாகமாக   இருந்து  வந்துள்ளது    என்று  பிரதமர்   குறிப்பிட்டார்.

“என்னுடைய   கருத்து   சுய  விருப்பம்   மக்களுக்கான  போராட்டத்தை   விஞ்சியதாக   அமைந்து  விடக்கூடாது”,  என  நஜிப்   சண்டாகானில்  தாமான்  சாபி  மக்கள்   வீடமைப்புத்   திட்டத்தைத்   தொடக்கிவைத்தபோது   கூறினார்.

நஜிப்,  அமைச்சரின்   பெயரைச்  சொல்லவில்லையே   தவிர   அவர்   சம்போர்னா   எம்பியும்    புறநகர்,  வட்டார    மேம்பாட்டுத்  துறையின்  முன்னாள்    அமைச்சரும்    இப்போது   பார்டி    வாரிசான்  சாபாவின்   தலைவருமான   முகம்மட்  ஷாஃபி   அப்டாலைத்தான்   குறிப்பிடுகிறார்   என்பது   தெளிவு.

சுய   விருப்பங்களை    நிறைவேற்றிக்கொள்ள    அரசியல்   கட்சிகள்   அமைக்கப்படுவது   குறித்து   கேள்வி   எழுப்பிய    அவர்,    அப்படிப்பட்ட   கட்சிகள்    நீண்ட  காலம்   நிலைத்திருப்பதில்லை     என்றார்.