வீடு வாங்க விரும்புவோரின் நிதிப் பிரச்னைக்குத் தீர்வுகாண உள்ளூர் வங்கிகள் முன்வரவேண்டும் என சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி வலியுறுத்தியுள்ளார்.
1997-இல் ஆசிய நிதி நெருக்கடியின்போது கூட்டரசு அரசாங்கமும் மக்களும் இணைந்து வங்கிகளின் செலுத்தப்படாத கடன்களுக்குப் பொறுப்பேற்க பெங்குருசான் தானாஹர்தா நேசனல் பெர்ஹாட்டைத் தோற்றுவித்தனர் என்றாரவர்.
இப்போது வாழ்க்கைச் செலவின அதிகரிப்பாலும் வருமானச் சுருக்கத்தாலும் மக்கள் அவதியுறும் நேரத்தில் பொறுப்பான நிறுவனக் குடிமக்கள் என்ற முறையில் வங்கிகள் உதவ முன்வரவேண்டும் என்றவர் சொன்னார்.