ஷாஃபி: அப்போதே சிஎம் பதவி கொடுக்க முன்வந்தார்கள், நான் என்றும் அதை விரும்பியதில்லை

cmசாபா  முதலமைச்சர்   ஆகும்  ஆசை   தமக்கு    என்றும்   இருந்ததில்லை   என்று  கூறும்  முன்னாள்   புறநகர்,   வட்டார  மேம்பாட்டு   அமைச்சர்   முகம்மட்  ஷாஃபி  அப்டால்,   முன்பு  ஒரு  முறை   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   தமக்கு   சிஎம்  பதவி  வழங்க   முன்வந்தபோது   அதைத்  தாம்   மறுதலித்து  விட்டதாகக்  கூறினார்.

“என்னிடம்  ‘பிரதர்   நீங்கள்   சாபா  முதலமைச்சர்  ஆக   வேண்டும்’  என்று   (நஜிப்)  கூறினார்.

“அதற்கு   நான் ‘ஐயா,  எனக்கு   அது   வேண்டாம்’  என்றேன்”, என  ஷாஃபி  கூறினார்.  இப்போது  பார்டி   வாரிசான்   சாபா   தலைவராகவுள்ள   ஷாஃபி   இன்று   கட்சி   நிகழ்வு  ஒன்றில்   பேசினார்.

“சாபா  முதலமைச்சர்   ஆக   நினைத்திருந்தால்   சட்டமன்றத்துக்குத்தான்   போட்டியிட்டிருப்பேன்    நாடாளுமன்றத்  தொகுதியில்   நின்றிருக்க   மாட்டேன்.

“முதலமைச்சர்   நாடாளுமன்றத்  தொகுதியில்   போட்டியிடுவதைக்  கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”,  என்று  அந்த  செம்பூர்னா    எம்பி  வினவினார்.

முன்னாள்  அமைச்சரும்   இந்நாள்   எதிர்கட்சி ஒன்றின்   தலைவருமான   ஒருவர்   தம்மை   சாபா   சிஎம்  ஆக்க   வேண்டுமெனக்  கேட்டுகொண்டதாக   நஜிப்   நேற்று   கூறியிருந்தது   குறித்துக்   கருத்துரைத்தபோது  ஷாபி   இவ்வாறு   கூறினார்.