ஐநா பிரகடனத்தை மதித்து அன்வாரை விடுவிப்பீர்: வழக்குரைஞர்கள் மனு

anwarகுதப்புணர்ச்சிக்  குற்றச்சாட்டின்கீழ்   இரண்டாண்டுகளுக்குமேல்    சிறையில்    இருந்துள்ள   எதிரணி   முன்னாள்   தலைவர்   அன்வார்  இப்ராகிமை  முன்கூட்டியே   விடுதலை   செய்யுமாறு    அவரின்   வழக்குரைஞர்கள்   அரசாங்கத்திடம்   மனுச்   செய்துள்ளனர்.

“அன்வார்  இப்ராகிமை   ஏன்  உடனடியாக  விடுவிக்க    வேண்டும்  என்பதற்கான   காரணங்களை  மனுவில்   விவரித்துள்ளோம்.

“தன்மூப்பாக   தடுத்து  வைப்பது   மீதான  ஐநா   பணிக்குழு  அவர்  சிறையிடப்பட்டது    சட்டவிரோதமானது     என்று   குறிப்பிட்டு   அவரை   விடுதலை   செய்ய   வேண்டும்    என்று   2015,  செப்டம்பர்  15-இல்   அறிவித்திருந்தது   அக்காரணங்களில்   ஒன்று.

“எனவே,  அவரைத்   தொடர்ந்து  சிறையில்   வைத்திருப்பது   அனைத்துலகச்   சமூகத்தில்   மலேசியாவின்   பிம்பத்தையும்   நற்பெயரையும்     கெடுத்து   விடும்”,  என   வழக்குரைஞர்கள்   என். சுரேந்திரனும்    லத்திபா   கோயாவும்   இன்று  ஓர்   அறிக்கையில்   கூறினர்.